குறும்செய்திகள்

பல நாடுகளில் டுவிட்டர் முடங்கியதாக தகவல்..!

சமூக வலைத்தள நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் டுவிட்டர் பல நாடுகளில் முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

டுவிட்டரில் எந்த பதிவுகளை காண முடியவில்லை என்றும் ‘எர்ரர்’ மெசேஜ்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டதாகவும் பயனர்கள் பலரும் தெரிவித்து இருந்தனர். எனினும், சில மணி நேரங்களில் மீண்டும் டுவிட்டர் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது.

எனினும், டுவிட்டர் முடங்கியதாக வெளியான தகவல் பற்றி தற்போது வரை ட்விட்டர் நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை. டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு நிர்வாக ரீதியிலும் டுவிட்டரில் பல்வேறு வசதிகளிலும் மாற்றங்களை எலான் மஸ்க் அமுல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தான் டுவிட்டர் முடங்கியுள்ளது. எலான் மஸ்க் டுவிட்டரை கைப்பற்றிய பிறகு 3-வது முறையாக இது போல ட்விட்டர் முடங்கியதாக கூறப்படுகிறது.

Related posts

இன்று முழு சந்திர கிரகணம் : பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய நட்சத்திரங்கள்..!

Tharshi

லாஸ்லியாவின் நடிப்பில் உருவாகும் கூகுள் குட்டப்பா பட டீசர்..! (Video)

Tharshi

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,948 ஆக அதிகரிப்பு..!

Tharshi

2 comments

Leave a Comment