குறும்செய்திகள்

காந்தி நகரில் உள்ள மயானத்தில் தாயின் சிதைக்கு தீ மூட்டினார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபான் தமது 100ஆவது வயதில் இன்று அதிகாலை காலமானார். காந்திநகரில் உள்ள மயானத்தில் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.

தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது.

இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார். மிகவும் இறுக்கமான முகத்துடன் சோகத்தை வெளிப்படுத்திய படி பிரதமர் மோடி காணப்பட்டார்.

“ஹீராபான், தமது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் குஜராத் – காந்தி நகரில் உள்ள ரய்சான் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். அவரது 100ஆவது பிறந்தநாள் அன்று தாம் அவரை சந்தித்த போது, புத்திசாதூர்யமாக செயற்பாடுகளை மேற்கொள்வதுடன், பரிசுத்தமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தெரிவித்தார்” என மோடி தமது டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரஷ்ய பல்கலை கழகத்தில் அமெரிக்க மாணவி மர்ம மரணம்..!

Tharshi

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய தப்பிக்க முயற்சித்ததில் பரிதாபமாக பலியான நபர்..!

Tharshi

இங்கிலாந்து-இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட் : இன்று ஆரம்பம்..!

Tharshi

2 comments

Leave a Comment