குறும்செய்திகள்

12500 பவுண்டுகள் செலவில் நாயாக மாறிய நபர்..!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், 12500 பவுண்டுகள் செலவு செய்து நாய் போலவே மாறியிருக்கிறார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

டோக்கோ (Toco) என்னும் அந்த ஜப்பானியருக்கு சிறுவயதிலிருந்தே நாயாக மாறவேண்டும் என்று ஆசையாம். ஆகவே, 12,500 பவுண்டுகள் செலவு செய்து நாய் போல் தோற்றமளிப்பதற்காக சிறப்பு உடை ஒன்றை உருவாக்கியிருக்கிறார் டோக்கோ.

டோக்கோ நாய் போல் செய்யும் சேட்டைகளை எல்லாம் யூடியூப் சேனல் ஒன்றில் வெளியிட, அவரை ஏராளமானோர் பின்தொடர்கிறார்கள்.

ஆனால், டோக்கோவுக்கு ஒரே ஒரு கவலை. தான் நாய் போல இன்னொரு வாழ்க்கை வாழ்வதை அறிந்தால் தன் நண்பர்கள் தன்னை மோசமாக நினைப்பார்களே என்பதுதான் அந்தக் கவலை.

தான் ஒரு விலங்காக மாறிவிட்டதை அறிந்த குடும்ப உறுப்பினர்களும், சில நண்பர்களும் மிகவும் ஆச்சரியப்பட்டதாக தெரிவிக்கும் டோக்கோ, ஆகவேதான் தான் நாய் போல் வாழ்வதைக் குறித்து அதிகம் மற்றவர்களிடம் கூறுவதில்லை என்கிறார்.

Related posts

ஆசிரியர் போராட்டத்திற்கு தீர்வு : இரு கட்டங்களில் சம்பளத்தை அதிகரிக்க முடிவு..!

Tharshi

அவிசாவளை பகுதியில் பதற்ற நிலை : பொலிசார் அதிரடி கைது நடவடிக்கை..!

Tharshi

சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சி..!

Tharshi

1 comment

Leave a Comment