குறும்செய்திகள்

31-12-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

டிசம்பர் 31,2022.
சுபகிருது வருடம், மார்கழி 16, சனிக்கிழமை, 31.12.2022
வளர்பிறை நவமி திதி இரவு 11:40 மணி வரை,
அதன்பின் தசமி திதி, ரேவதி நட்சத்திரம் மாலை 5:04 மணி வரை
அதன்பின் அசுவினி நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:31 – 9:00 மணி.
ராகு காலம் : காலை 9:00 – 10:30 மணி.
எமகண்டம் : மதியம் 1:30 – 3:00 மணி.
குளிகை : காலை 6:00 – 7:30 மணி.
சூலம் : கிழக்கு.

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
அசுவினி : இன்று மாலை வரை நண்பர்களால் ஏற்பட்ட சில சங்கடம் நீடிக்கும். செலவு அதிகரிக்கும் நாள்.
பரணி : புதிய முயற்சி இன்று வேண்டாம். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.
கார்த்திகை 1 : குடும்பத்தினர் வழியில் செலவுகள் அதிகரிக்கும். பண நெருக்கடியால் ஏற்படும்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4 : வருமானம் அதிகரிக்கும். அரசு வழியில் இழுபறியாக இருந்த வேலை நிறைவேறும்.
ரோகிணி : வேலைக்காக எதிர்பார்த்த தகவல் வரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடம், ஊர்மாற்றம் குறித்த தகவல் வரும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாக குலதெய்வத்தை வழிபடும் நாள்.
திருவாதிரை : எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.
புனர்பூசம் 1, 2, 3 : அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஒரு எண்ணம் நிறைவேறும்.

கடகம்:

புனர்பூசம் 4 : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு பெரியோர் ஆதரவுடன் தீர்வு காண்பீர்கள்.
பூசம் : நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் முன்னேற்றம் காணும் நாள்.
ஆயில்யம் : உத்தியோகத்தில் இருந்த சங்கடம் விலகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

சிம்மம் :

மகம் : இன்று மாலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் செயலில் கவனம் தேவை.
பூரம் : யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்பு இழுபறியாகும். அலைச்சல் அதிகரிக்கும்.
உத்திரம் 1 : எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.பொறுமை தேவைப்படும் நாள்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4 : இன்று மாலை வரையில் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். அதன் பின் இழுபறியாகும்.
அஸ்தம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். புதிய நட்பினால் உங்கள் எண்ணம் ஈடேறும்.
சித்திரை 1, 2 : தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த வருவாயை அடைவீர். நட்பு வட்டம் விரிவடையும்.

துலாம்:

சித்திரை 3, 4 : தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
சுவாதி : எதிர்பார்த்த தகவல் வரும். அதலால் நீண்டநாள் கனவு நிறைவேறும். ஆதாயமான நாள்.
விசாகம் 1, 2, 3 : செயலில் இருந்து வந்த தடை விலகும். தொல்லை அளித்தவர் விலகுவர்.

விருச்சிகம்:

விசாகம் 4 : வியாபாரத்தில் இன்று உங்கள் அணுகுமுறையால் அதிக லாபம் ஏற்படும். உண்டாக்கும்.
அனுஷம் : நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த செயல் ஒன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.
கேட்டை : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதில் நிறைவேறும். உறவினர் ஒருவர் உதவி செய்வார்.

தனுசு:

மூலம் : உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
பூராடம் : பணிபுரியும் இடத்தில் மேலதிகாரியின் ஆதரவால் உங்கள் எண்ணம் ஒன்று ஈடேறும்.
உத்திராடம் 1 : திட்டமிட்டிருந்த செயலை ஒத்திப் போடுவீர்கள். சேமிப்பு கரையும் நாள்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4 : உறவினர் ஒருவர் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
திருவோணம் : மறைமுக எதிர்ப்பை முறியடித்து உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
அவிட்டம் 1, 2 : வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் குழப்பம் வந்து நீங்கும் நாள்.

கும்பம்:

அவிட்டம் 3, 4 : உத்தியோகத்தில் இருப்பவர்களுடைய எண்ணம் நிறைவேறும் நாள்.
சதயம் : உடல் நலத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். அரசு வழியில் நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 : குடும்ப நலன் கருதி மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் காணும் நாள்.

மீனம்:

பூரட்டாதி 4 : குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் துணிச்சலான முடிவு எடுப்பீர்கள்.
உத்திரட்டாதி : நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும் நாள்.
ரேவதி : மனம் விரும்பியபடி செயல்படுவீர்கள். யாருடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம்.

Related posts

மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற அஜித்தின் 30 அடி கட் அவுட்..!

Tharshi

01-11-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

1 comment

Leave a Comment