குறும்செய்திகள்

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்..!

சீரகத்தின் மருத்துவப் பயன்கள் எவையெனப் பார்ப்போமா..!

1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.
2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.
3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.
4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.
5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.
6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.
7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.
8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.
9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.
10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.
12. சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.

Related posts

31-12-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஹிசாலினி போன்ற சிறுமிகள் உருவாவதற்கு வறுமையே காரணம் : பழனி திகாம்பரம்..!

Tharshi

நானே பிளாஸ்டிக்கை கொண்டு வந்துட்டா… : விழி பிதுங்கிய டாக்டர்..!

Tharshi

Leave a Comment