குறும்செய்திகள்

சனிப்பெயர்ச்சி 2023 பலன்கள் : மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை..!

மகம்:

சனி பகவான் உங்களின் பதினான்காவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சூரியன் – கேது அம்சத்தில் பிறந்த நீங்கள் அனைத்துத் துறைகளிலும் அறிவுத்திறனுடன் ஜொலிப்பீர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு தொடர்பான கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். சூரியன் சஞ்சாரத்தால் அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு நிம்மதியை இழக்கச் செய்யும். பிள்ளைகள் புத்திசாதுர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியைத் தரும்.

கலைத்துறையினருக்கு பிறமொழி படங்களில் பணிபுரிய சந்தர்ப்பம் கூடி வந்தால் அந்த வாய்ப்பினை நழுவ விட்டு விடாதீர்கள். புகழ் மற்றும் விருதுகளை வாங்குவதற்கு சிறிது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிவரும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு பொதுப்பணிகளில் ஏற்பட்டு வந்த தடைகள் மற்றும் தோல்விகள் இருக்காது. சிலர் கௌரவப் பதவி கிடைக்கப் பெறுவார்கள்.

பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். இந்த சனிப்பெயர்ச்சியால், அதிர்ஷ்டம் தரும் வாய்ப்புகள் அமையப் போகிறது!

70% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

பூரம்:

சனி பகவான் உங்களின் பதிமூன்றாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சூரியன் – சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பணம் வருவதில் சிரமம் எதுவும் இருக்காது.

இந்த சனிப்பெயர்ச்சியில் எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். வயிறு சம்பந்தமான கோளாறு ஏற்படும். எந்தக் காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் ஒருவித மெத்தனப் போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபட வேண்டி இருக்கும்.

கலைத்துறையினர் பிற மொழிப் படங்களில் பணிபுரிவதன் மூலம் மேன்மை காணலாம். வெளியூர் வேலைகளில் ஈடுபடும்போது மிகவும் கவனமுடன் செயல்படுங்கள்.

அரசியல்வாதிகள் எந்தக் காரியம் செய்வதானாலும் மிகவும் எச்சரிக்கையுடனும், பொறுமையுடனும் செயல்படுங்கள்.

பெண்கள், வாக்குவாதங்கள் மற்றும் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியைத் தரும்.

பரிகாரம்: ஸ்ரீஆண்டாள் தாயாருக்கு பாயசம் நைவேத்தியம் செய்து வணங்கி வாருங்கள். எதிர்ப்புகள் அகலும். இந்த சனிப்பெயர்ச்சியால், கடன்கள் அடையும் நல்ல சூழல்கள் அமையும்.

69% நற்பலன்கள் கிடைக்கும்.

உத்திரம்:

சனி பகவான் உங்களின் பனிரெண்டாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சூரியன் அம்சத்தில் பிறந்த நீங்கள் சிக்கனத்தைக் கடைபிடிப்பவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் பேச்சின் இனிமை மற்றும் சாதுர்யத்தின் மூலம் காரியத்தில் வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும்.

தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும்.

அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும்.

பெண்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: ஸ்ரீஐயப்ப சுவாமியை வணங்குவதன் மூலம் உடல் நலம் சீராகும். பொருளாதாரச் சூழல் நன்றாக இருக்கும். இந்த சனிப்பெயர்ச்சியில், உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

65% நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அஸ்தம்:

சனி பகவான் உங்களின் பதினோராவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

புதன் – சந்திரன் அம்சத்தில் பிறந்த நீங்கள் மனம் சார்ந்து முடிவுகளை எடுப்பவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனக்கஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோதைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அடையப் பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.

கலைத்துறையினர் புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களும், ரசிகர்களும் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள்.

அரசியல்வாதிகள் கடினமாக உழைத்து, உங்கள் முழுத் திறமையையும் வெளிக்கொணர்வீர்கள். வருமானமும் சீராகவே இருக்கும்.

பெண்களுக்கு மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும்.

மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாத வகையில் தடங்கல்கள் ஏற்படலாம்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வாருங்கள். எதிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் அகலும். இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு பண வரவு கூடும்!

70% நல்ல பலன்கள் ஏற்படும்.

சித்திரை:

சனி பகவான் உங்களின் பத்தாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

செவ்வாய் அம்சத்தில் பிறந்துள்ள நீங்கள் தைரியமானவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் பணவரவு இருக்கும். மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள்.

குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும்.

கலைத்துறையினர் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.

பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதுர்யமான பேச்சின் மூலம் பிரச்சினைகள் தீரும். பணவரவு திருப்தி தரும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்: காவல்தெய்வத்தை வழிபடுவதால் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். இந்த சனிப்பெயர்ச்சியில், உங்களுக்கு இதுவரை இருந்த நோய்கள் நீங்கி, உடல்நலம் சீராகும்.

71% நற்பலன்கள் ஏற்படும்.

Related posts

எரிபொருள் ஒதுக்கத்தில் மீண்டும் மாற்றமா..? : இறுதி முடிவு இன்று..!

Tharshi

தமிழர் பிரதிநிதிகளை சந்தித்த இந்திய வெளிவிவகார செயலாளர்..! (படங்கள் இணைப்பு)

Tharshi

இன்று இதுவரை 2759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment