குறும்செய்திகள்

சனிப்பெயர்ச்சி 2023 பலன்கள் : சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, பூராடம்..!

சுவாதி:

சனி பகவான் உங்களின் ஒன்பதாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சுக்கிரன் – ராகு அம்சத்தில் பிறந்துள்ள நீங்கள் சோம்பல் என்பதே அறியாதவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் பணத்தேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண் பகை முதலானவை ஏற்படலாம் உங்களைக் கண்டு அடுத்தவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து எதையும் அமைதியாக எடுத்துச் சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

கலைத்துறையினர் ஏற்றம் காண்பார்கள். உங்கள் பொருட்கள் திருடு போகலாம். கவனமுடன் இருங்கள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு மனஅமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை உருவாகும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாகப் படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீநரஸிம்மரை தினமும் வணங்கி வாருங்கள். காரியத் தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். இந்த சனிப்பெயர்ச்சியால், புதிய வீடு மனை பூமி வாங்கும் யோகத்தைப் பெறுவீர்கள்.

68% நற்பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

விசாகம்:

சனி பகவான் உங்களின் எட்டாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

குருவின் அம்சத்தில் பிறந்த நீங்கள் அடுத்தவருக்காக அதிகம் உழைப்பவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்குத் தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கிக் கொடுப்பீர்கள்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தம் மூலம் சிறப்பான வளர்ச்சி காண்பீர்கள். புகழும் விருதுகளும் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு கௌரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்களின் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

பெண்கள், கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரவு திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு பாடங்களைப் படிப்பீர்கள்.

பரிகாரம்: முருகப்பெருமானை தரிசித்து வாருங்கள். தடைகள் அனைத்தும் நீங்கும்.இந்த சனிப்பெயர்ச்சியால், உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

65% நற்பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அனுஷம்:

சனி பகவான் உங்களின் ஏழாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

செவ்வாய் – சனி அம்சத்தில் பிறந்த நீங்கள் சுகதுக்கம் பாராமல் உழைப்பவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்தக் காரியத்தை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவு இருக்கும். இடமாற்றம்,வெளியூர்ப் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும்.

தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்துப் பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்துவேற்றுமை நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் உங்களின் உழைப்பின் மூலம் சிறந்த நிலைக்கு வரலாம்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும்.

பெண்கள் எந்தச் செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள், வீண் அலைச்சல் உண்டாகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.

பரிகாரம்: சித்தர்களை தினமும் வணங்கி வாருங்கள். மன நிம்மதி அதிகரிக்கும். மனதில் இருக்கும் கலக்கம் அகலும்.

68% நல்ல பலன்கள் கிடைக்கும்.

கேட்டை:

சனி பகவான் உங்களின் ஆறாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

செவ்வாய் – புதன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மனக்கணக்கு போடுவதில் வல்லவர்.

இந்த சனிப்பெயர்ச்சியில் உல்லாசப் பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களைச் சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளைத் திறமையாகச் செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள்.

கலைத்துறையினர் திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள்.

பெண்கள் பயணங்கள் செல்ல நேரிடும். எந்தப் பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வரவும். மனக்கவலைகள் நீங்கும். தடைகள் அனைத்தும் அகலும்.

69% நற்பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

பூராடம்:

சனி பகவான் உங்களின் நான்காவது நக்ஷத்ரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

குரு – சுக்கிரன் இணைப்பில் பிறந்த உங்களுக்கு மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

இந்த சனிப்பெயர்ச்சியில் பணவரவு எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதுர்யத்தால் எடுத்த காரியத்தைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறைச் சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலகப் பணிகளை முடிக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துகளைக் கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாக நிலை உண்டு. சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடியைச் சரிசெய்வீர்கள்.

பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.

மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடையக் கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தைச் சிதற விடாமல் படிப்பது அவசியம்.

பரிகாரம்: ஸ்ரீதுர்கை அம்மனை தினமும் வனங்கி வர பணம் சார்ந்த பிரச்சனைகள் அகலும். இந்த சனிப்பெயர்ச்சியால் சாதனைகள் படைப்பீர்கள்.

72% நல்ல பலன்கள் கிடைக்கும்.

Related posts

மாம்பழத்தில் ருசியான பாயாசம் செய்வது எப்படி என்று தெரியுமா..!

Tharshi

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சுவையான காலிஃப்ளவர் சூப்..!

Tharshi

என்னுடைய கட்சிப் பணியை யாராலும் தடுக்க முடியாது : சசிகலா..!

Tharshi

Leave a Comment