குறும்செய்திகள்

திடீர் சந்திப்பில் சம்பந்தனுக்கு மகிந்த வழங்கிய உறுதிமொழி..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரது இல்லம் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ​​ வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினைகளை முன்வைத்த சம்பந்தன், வடகிழக்கு பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் என கூறினார்.

இந்த பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி சுமுக தீர்வை எட்ட முயற்சிப்பதாக, மகிந்த ராஜபக்ச, சம்பந்தனிடம் உறுதியளித்தார்.

அதேநேரம் அடுத்தவாரம் நடைபெறவுள்ள மூன்று நாள் சர்வகட்சி மாநாட்டில் தனது கட்சியான SLPPயும் கலந்துகொள்ளும் என்றும், அதன்பின் அதன் முன்மொழிவுகளை சாதகமான முறையில் ஆய்வு செய்யும் என்றும் மகிந்த கூறினார்.

Related posts

டெல்டா வகை கொவிட் வைரஸ் : மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு..!

Tharshi

உடல் எடையை குறைத்தால் நடந்ததை எண்ணி வருந்தும் நடிகை..!

Tharshi

சிவராத்திரி தினத்தில் புது வீட்டில் குடியேறிய நடிகர் தனுஷ்..!

Tharshi

Leave a Comment