குறும்செய்திகள்

06-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

ஜனவரி 06,2023

சுபகிருது வருடம், மார்கழி 22, வெள்ளிக்கிழமை, 6.1.2023,
பவுர்ணமி திதி நாளை அதிகாலை 4:54 மணி வரை,
அதன்பின் பிரதமை திதி, திருவாதிரை நட்சத்திரம் நள்ளிரவு 12:52 மணி வரை,
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்.

நல்லநேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : காலை 10:30 – 12:00 மணி
எமகண்டம் : மதியம் 3:00 – 4:30 மணி
குளிகை : காலை 7:31 – 9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை
பொது : ஆரூத்ரா தரிசனம், பவுர்ணமி விரதம்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
அசுவினி : உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பரணி : செயலில் வேகம் இருக்கும். குடும்பத்தில் ஒருவர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.
கார்த்திகை 1 : வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்களால் நன்மை நடக்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4 : உற்சாகத்துடன் நினைத்ததை சாதிப்பீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
ரோகிணி : வர வேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். நிம்மதியான நாள்.
மிருகசீரிடம் 1, 2: சுயதொழில் செய்து வருபவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4 : செயல்களில் குழப்பம் உண்டாகும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.
திருவாதிரை : யோசித்து செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் இன்று ஈடுபட வேண்டாம்.
புனர்பூசம் 1, 2, 3 : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். நிதானமாக செயல்படுவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4 : எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். பொறுமை தேவையான நாள்.
பூசம் : அலைச்சல் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் சிறு சிறு சங்கடம் உண்டாகும்.
ஆயில்யம் : சிறு சலசலப்பு தோன்றி மறையும். அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டு.

சிம்மம் :

மகம் : நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும் நாள்.
பூரம் : திட்டமிட்டு நினைத்ததை செய்வீர்கள். தொழிலில் இருந்து வந்த தடை விலகும்.
உத்திரம் 1: பழைய கடன் வசூலாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.மகிழ்ச்சியான நாள்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4 : குடும்பத்தில் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கோயிலுக்கு செல்வீர்கள்.
அஸ்தம் : எதிர்பார்த்த பணம் வரும். நிதி நிலை சீராகும்.மனநிறைவான நாள்.
சித்திரை 1, 2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் இன்று வரும். உங்கள் விருப்பம் எளிதில் நிறைவேறும்.

துலாம்:

சித்திரை 3, 4 : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலிதமாகும்.
சுவாதி : தடைபட்டிருந்த செயல்களை மீண்டும் தொடர்வீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
விசாகம் 1, 2, 3: நண்பர்கள் உதவியுடன் புதிய முயற்சியில் அக்கறை காட்டுவீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4 : சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் கவனம் தேவை. புதிய முயற்சி வேண்டாம்.
அனுஷம் : இனம் புரியாத சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மனம் சீராக கோயிலுக்கு செல்வீர்கள்.
கேட்டை : வாகனத்தில் கவனமுடன் செல்வீர்கள். நேற்றைய செயல்கள் இழுபறியாகும்.

தனுசு:

மூலம் : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னை நீங்கும்.
பூராடம் : புதிய முயற்சி பலன் தரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
உத்திராடம் 1 : எதிர்பார்த்த அனுகூலம் ஏற்படும். தடைபட்டிருந்த வேலைகளை மீண்டும் தொடரும்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வீடு தேடி வரும்.
திருவோணம்: விஐபி ஆதரவுடன் ஒரு முயற்சியை நிறைவேற்றி லாபமடைவீர்கள்.
அவிட்டம் 1, 2: பொது நலனில் உள்ளோருக்கு செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும் நாள்.

கும்பம்:

அவிட்டம் 3, 4: குடும்பத்தில் ஒருவருடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வருமானம் உண்டாகும்.
சதயம் : உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள். சாதுர்யமாக செயல்படுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: நண்பர்கள் ஆதரவுடன் ஒரு செயலை செய்து லாபம் காண்பீர்கள். எதிர்ப்பு விலகும்.

மீனம்:

பூரட்டாதி 4 : அலைச்சல் அதிகரிக்கும் நாள். உடல்நிலையில் கவனம் தேவை.
உத்திரட்டாதி : ஆரோக்யத்தில் சங்கடம் உண்டாகும். மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவீர்.
ரேவதி : உறவினர் ஒருவரால் சங்கடம் ஏற்படும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.

Related posts

வவுனியாவில் இளவயதினர் 7 பேர் கொரோனா வைரஸுக்கு பலி..!

Tharshi

நோய் எதிர்ப்புசக்தி : கொரோனாவுக்கு தீர்வாகுமா..!!

Tharshi

ஐ.பி.எல். கிரிக்கெட் : கொல்கத்தாவை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி..!

Tharshi

Leave a Comment