குறும்செய்திகள்

2வது டி20 : இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி..!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாடும் வாய்ப்பை இலங்கைக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 206 ஓட்டங்களை 6 விக்கட்டுகளை இழந்து பெற்றது.

குசல் மெண்டில் 31 பந்துகளில் 52 ஒட்டங்களைப் பெற்ற அதேநேரம், அதிரடியாக துடுப்பாடிய அணித் தலைவர் தசுன் ஷானக, 22 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை சார்பாக 20க்கு20 கிரிக்கட் போட்டிகளில் வேகமாக அரைச்சதம் பெற்றவர் என்ற, 16 வருடங்களாக நீடித்த சாதனையை இன்று அவர் முறியடித்தார்.

முன்னதாக மஹேல ஜெயவர்தன மற்றும் குமார் சங்கங்கார் ஆகியோர் இந்த சாதனயைப் படைத்திருந்தனர்.

பந்துவீச்சில் அக்சர் பட்டேல் 4 ஓவர்களில் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும், உம்ரான் மாலிக் 4 ஓவர்களில் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலளித்தாடிய இந்திய அணி ஆரம்பத்திலேயே விக்கட்டுகளை இழந்து முதல் 10 ஓவர்களுக்குள் முக்கியமான 5 விக்கட்டுகளை இழந்தது.

எனினும் அக்சர் பட்டேல் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரின் வேகமான துடுப்பாட்டம் காரணமாக, அணி மீண்டும் போட்டியில் தடமேற்றப்பட்டது.

அக்சர் பட்டேல் 20 பந்துகளில் அரைச்சதம் அடித்தார். அவர் 31 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

சுரேஸ்குமார் யாதவ் 36 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

இதன்படி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து இந்திய அணியால் 190 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

இலங்கை 16 ஓட்டங்களால் இந்த போட்டியில் வெற்றியீட்டியது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் இப்போது இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வென்றுள்ள நிலையில் சமநிலையில் உள்ளது.

Related posts

அம்மா டயானாவின் மறைவால் போதை பழக்கத்துக்கு அடிமையானேன் : இளவரசர் ஹாரி..!

Tharshi

19-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஆசிரியரின் கேள்வியும் – மாணவனின் பாட்டும்.. : இறுதியில் நடந்தது என்ன..!!

Tharshi

Leave a Comment