குறும்செய்திகள்

இணையத்தில் லீக்கான கூகுள் பிக்சல் 7a விவரங்கள்..!

கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புது ஸ்மார்ட்போன் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் இந்திய வெளியீட்டு விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.

முந்தைய தகவல்களில் பிக்சல் 7a டிசைன் மற்றும் டிஸ்ப்ளே அம்சங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதன் இந்திய வெளியீடு பற்றிய தகவலும் டுவிட்டர் தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு திகதி பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் மே மாத வாக்கில் நடைபெற இருக்கும் கூகுள் I/O நிகழ்வில் அறிவிக்கப்படலாம்.

கடந்த ஆண்டு பிக்சல் 7a மாடல் 2022 கூகுள் I/O நிகழ்வில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதன் சர்வதேச வெளியீட்டின் போதே இந்திய சந்தையிலும் பிக்சல் 7a மாடல் அறிமுகம் செய்யப்படலாம். கூகுள் நிறுவனம் பிக்சல் 7a பற்றி இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

கூகுள் பிக்சல் 7a எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் :

அம்சங்களை பொருத்தவரை புதிய கூகுள் பிக்சல் 7a மாடலில் FHD+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், டென்சார் G2 பிராசஸர், குவால்காம் சிப், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், 64MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு சென்சார் என டூயல் கேமராக்கள், டூயல் சிம் ஸ்லாட்கள், 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Related posts

புபோனிக் பிளேக் நோய் தொற்று : மங்கோலியாவில் மேலும் ஒருவர் பலி..!

Tharshi

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் ஏற்படலாம் : இம்ரான்கான் எச்சரிக்கை..!

Tharshi

ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல்..!

Tharshi

Leave a Comment