குறும்செய்திகள்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் : இருவரை தூக்கிலிட்ட ஈரான்..!

துணை ராணுவ வீரர் ஒருவரை கொன்றதாக கூறி ஈரான் நிர்வாகம் இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது.

இளம் பெண் ஒருவர் முறையாக ஹிஜாப் அணியாதது தொடர்பாக கைது செய்யப்பட்டு, காவலில் மரணமடைந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் வீதியில் இறங்கி ஹிஜாப் உடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈரான் நிர்வாகம் கடுமையாக போராடி வருகிறது. சனிக்கிழமை நடந்த துக்கு தண்டனையுடன், இந்த விவகாரத்தில் மரண தண்டனையை எதிர்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

டிசம்பர் மாதம் இரு ஆண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், முகமது மஹ்தி கராமி மற்றும் செய்யத் முகமது ஹொசைனி ஆகிய இருவர் சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் துணை ராணுவ வீரர் ஒருவரை படுகொலை செய்துள்ளதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள் இதுவரை கைதாகியுள்ளனர். செப்டம்பர் மாதத்தில் தொடங்கிய இந்த போராட்டத்தில் இதுவரை 14 பேர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் நால்வருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இருவருக்கு மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 6 பேர் விசாரணை முடிய காத்திருக்கிறார்கள், இருவர் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

30-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

16-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

05-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment