குறும்செய்திகள்

2வது டி20 : இலங்கைக்கு இமாலய இலக்கு வைத்த இந்தியா..!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்றுவரும் மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணிக்கு 229 என்ற வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காது 51 பந்துகளில் 112 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

9 ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

சுப்மன் கில் 46 ஓட்டங்களையும் மற்றும் ராஹுல் திரிபதி 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் டில்சான் மதுசங்க இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Related posts

முதலிரவில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை : அதிர்ச்சியில் மனைவி..!

Tharshi

விஜய்யின் பீஸ்ட் படத்தில் இத்தனை வில்லன்களா.. : லேட்டஸ்ட் அப்டேட்..!

Tharshi

சூடானில் ராணுவம் – துணை ராணுவம் மோதலில் பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு..!

Tharshi

Leave a Comment