குறும்செய்திகள்

இவ்வாண்டு பரீட்சைகள் பிற்போகும் சாத்தியம்..!

2023ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகள் அனைத்தும் பிற்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. எனினும், 2022ம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் மே மாதம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதும், அதற்கான திகதி இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில், 2023ம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் வரையில் பிற்போகக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக, பரீட்சைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதேபோல 2023ம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் டிசம்பரில் இருந்து அடுத்த ஆண்டு வரையில் பிற்போகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

ஆசையாக சிக்கன் வறுவல் ஆர்டர் செய்த பெண் : கைக்குட்டையை வறுத்து சூடாக அனுப்பி வைத்த ஹோட்டல்..!

Tharshi

தனது தொண்டு நிறுவனம் மூலம் இலவச தடுப்பூசி வழங்கிய பிரணிதா..!

Tharshi

அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி..!

Tharshi

Leave a Comment