குறும்செய்திகள்

கே.ஜி.எப் 3ம் பாகம் : லேட்டஸ்ட் அப்டேட்..!

கே.ஜி.எப் படத்தின் 3ம் பாகம் எழுதும் பணியில் இயக்குனர் பிரசாந்த் நீல் தீவிரமாக இருந்து வருகிறார்.

இரண்டாம் பாகத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கடத்தப்பட்ட தங்கத்தை கப்பலில் கொண்டு செல்வது போல் அடுத்த பாகத்திற்கான முன்னோட்டக் காட்சியை காட்டியிருப்பார்கள்.

இதனால் 3-ம் பாகம் முழுவதும் கடலில் தான் கதை நடப்பதாக காட்டப் போகிறார் என்பது போல் சொல்லியிருப்பார். கடலில் நடக்கும் சாகச கதை இன்னும் மிரட்டலாக இருக்கும் என்கிறார்கள்.

இந்நிலையில், கே.ஜி.எப். 3-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 2025-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இப்படம் 2026-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தின் ஐந்தாவது பாகம் முடிந்த பிறகு யஷ்ஷிற்கு பதில் வேறொரு ஹீரோவை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கொழும்பில் Uber Eats மூலம் உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்..! (ஆதாரம் இணைப்பு)

Tharshi

08-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

பாகிஸ்தானில் மழை – வெள்ளம் : 21 பேர் உயிரிழப்பு..!

Tharshi

Leave a Comment