குறும்செய்திகள்

பிரான்சில் வீடு ஒன்றில் அழுகிய நிலையில் இரு குழந்தைகளின் உடல்கள்..!

பிரான்சில் வீடு ஒன்றில் அழுகிய நிலையில் இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கிழக்கு பிரான்சிலுள்ள Rumilly என்னும் நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

அப்போது அங்கு இரண்டு குழந்தைகளின் உடல்களை அவர்கள் கண்டெடுத்துள்ளார்கள். அவற்றில் ஒரு குழந்தையின் உடல் சூட்கேஸ் ஒன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது.

அந்த குழந்தைகளின் உடல்கள் இரண்டும் அந்த வீட்டில் ஓராண்டுக்கும் மேலாக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

அக்கம்பக்கத்தவர்கள் அந்த வீட்டில் ஒரு கணவனும் மனைவியும் அவர்களுடைய இரண்டு பிள்ளைகளும் சாதாரணமாக வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

அந்த தம்பதியர் எந்த நாட்டவர்கள் என்பது குறித்த தகவல்களோ அவர்களுடைய பெயர் முதலான விவரங்களோ வெளியாகவில்லை.

பொலிசார் தொடர்ந்து அந்த பயங்கர சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related posts

11-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

25 முதல் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பம்..!

Tharshi

2 கோடிக்கு மேல் சம்பளம் வேண்டும் : அடம் பிடிக்கும் அந்த நடிகை..!

Tharshi

Leave a Comment