குறும்செய்திகள்

வாரிசு பட ரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு..!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. ‘வாரிசு’ திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு மொழி ரிலீஸ் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி தெலுங்கில் வரும் 14-ம் திகதி வாரசுடு திரைப்படம் வெளியாகும் என்று போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

தெலுங்கில் வாரிசுடு படம் தாமதமாக வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Related posts

வாழ்க்கை துணைக்கு தவறான தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா..!

Tharshi

இவ்வாண்டு பரீட்சைகள் பிற்போகும் சாத்தியம்..!

Tharshi

டோக்கியோ ஒலிம்பிக் : வெள்ளி பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவி தாஹியாவுக்கு குவியும் வாழ்த்துகள்..!

Tharshi

Leave a Comment