குறும்செய்திகள்

விரைவில் வெளிவரவுள்ள சாடிலைட் மெசேஜிங் வசதி கொண்ட மோட்டோ ஸ்மார்ட்போன்..!

மோட்டோரோலா நிறுவனம் முற்றிலும் புதிய ரக்கட் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. டெஃபி 5ஜி என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போனை மோட்டோரோலா மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் சாடிலைட் மெசேஜிங் அம்சத்தை வழங்குவதற்காக பிரத்யேக சிஸ்டம் வழங்கப்படுகிறது. பிரிட்டனை சேர்ந்த புல்லிட் குழுமத்துடன் கூட்டணி அமைத்து இருக்கும் மோட்டோரோலா நிறுவனம் புதிதாக ரக்கட் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது.

இதுதவிர CAT உடனும் மோட்டோரோலா இணைந்துள்ளது. கடந்த ஆண்டே இருவழி சாடிலைட் மெசேஜிங் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் திட்டம் இருப்பதாக மோட்டோரோலா அறிவித்து இருந்தது.

அந்த வகையில், அந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலா டெஃபி 5ஜி-யாக இருக்கும் என கூறப்படுகிறது. புல்லிட் நிறுவனம் பிரபல சிப் உற்பத்தியாளர் மற்றும் சாடிலைட் நெட்வொர்க் உள்கட்டமைப்பு நிறுவனங்களுடன் இரு ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி புது தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது.

இது புது ஸ்மார்ட்போனை செல்லுலார், வைபை மற்றும் சாடிலைட் கனெக்டிவிட்டி இடையே சீராக மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்கும். இந்த அம்சம் புல்லிட் சாடிலைட் கனெக்ட் எனும் பெயரில் அழைக்கப்பட இருக்கிறது. இது புல்லிட், மீடியாடெக் மற்றும் ஸ்கைலோ என மூன்று நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த தொழில்நுட்பம் கொண்ட சாதனம் வைபை அல்லது செல்லுலார் நெட்வொர்க் உடன் இணைக்க முடியாத பட்சத்தில் புல்லிட் மெசேஜிங் சிஸ்டம் சாடிலைட் உடன் இணைந்து கொள்ளும்.

குறிப்பாக, மறுபுறம் குறுந்தகவலை பெறுவோருக்கு வழக்கமான எஸ்எம்எஸ் போன்றே செல்லும். இதற்கு புல்லிட் சாடிலைட் மெசஞ்சர் செயலி மூலம் பதில் அனுப்பவும் முடியும். இந்த அம்சம் பற்றிய முழு விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

எனினும், குருந்தகவல்களுக்கான கட்டணம் சாடிலைட் மெசேஜிங் சந்தாதாரர் திட்டத்தில் இருந்து கழிக்கப்பட்டு விடும் என தெரிகிறது. இதற்கான கட்டணங்கள் மாதம் 4.99 டாலர்களில் இருந்து துவங்கலாம். புதிய மோட்டோரோலா டெஃபி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

எனினும், இந்த ஆண்டு முதல் காலாண்டிற்குள் டெஃபி 5ஜி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

Related posts

17-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடலை அறிமுகம் செய்துள்ள சாம்சங் நிறுவனம்..!

Tharshi

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் உடற்பயிற்சி, யோகா செய்யலாமா..!

Tharshi

Leave a Comment