குறும்செய்திகள்

சீரக சம்பா மட்டன் பிரியாணி..!

சீரக சம்பா அரிசியில் மட்டன் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

சீரக சம்பா அரிசி – 4 கப்

மட்டன் – அரை கிலோ

இஞ்சி, பூண்டு – 4 ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 4

தக்காளி – 3

பச்சை மிளகாய் – 4

மிளகாய் தூள் 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

தேங்காய் – ஒரு மூடி

தயிர் – அரை கப்

லெமன் – 1

புதினா – ஒரு கட்டு

கொத்தமல்லித் தழை – ஒரு கட்டு

நெய் – அரை கப்

எண்ணெய் – அரை கப்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க : கிராம்பு – 3

பட்டை – 3 சிறிய துண்டு
ஏலக்காய் – 3
பிரிஞ்சி இலை – ஒன்று
சோம்பு – ஒரு ஸ்பூன்

செய்முறை :

*மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.

*அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

*தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் பால் எடுத்து வைக்கவும்.

*வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும் .

*கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து வைக்கவும்.

*குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் கால் கப் தயிர், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

*குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்த பின் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

*வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.

*இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.

*தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.

*அடுத்து அதில் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

*ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து குக்கரை இறக்கவும்.

*பின்பு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும்.

*சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்.

Related posts

ரணிலுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை : சுமந்திரன் அதிருப்தி..!

Tharshi

மைக்ரோசாப்ட் உருவாக்கி வரும் புது கேமிங் சேவை விரைவில் அறிமுகம்..!

Tharshi

விமானம் மூலம் மும்பைக்கு மாற்றப்பட்ட ரிஷப் பான்ட்..!

Tharshi

Leave a Comment