குறும்செய்திகள்

12-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

ஜனவரி 12,2023

சுபகிருது வருடம், மார்கழி 28, வியாழக்கிழமை, 12.1.2023,
தேய்பிறை பஞ்சமி திதி மதியம் 2:10 மணி வரை,
அதன்பின் சஷ்டி திதி, பூரம் நட்சத்திரம் மதியம் 12:29 மணி வரை
அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 10:30 – 12:00 மணி
ராகு காலம் : மதியம் 1:30 – 3:00 மணி
எமகண்டம் : காலை 6:00 – 7:30 மணி
குளிகை : காலை 9:00 – 10:30 மணி
சூலம் : தெற்கு.

பரிகாரம் : நல்லெண்ணெய்
சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்
பொது : விவேகானந்தர் பிறந்த நாள்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
அசுவினி: நீண்டநாள் முயற்சி ஒன்று வெற்றியாகும். பிள்ளைகளால் நன்மை அடைவீர்கள்.
பரணி: பணியிடத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உறவினரால் உதவி உண்டாகும்.
கார்த்திகை 1: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். உங்கள் செல்வாக்கு உயரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4: அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும். பகைவர்களின் தொல்லை விலகும்.
ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று பூர்த்தியாகும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: தடைகளை சரி செய்து வெற்றி அடைவீர்கள். உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும்.
திருவாதிரை: தொழிலில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புதிய முயற்சி ஆதாயமாகும்.
புனர்பூசம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் எண்ணத்தைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூசம்: எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
ஆயில்யம்: இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும். வழக்கு சாதகமாகும்.

சிம்மம் :

மகம்: மனதில் குழப்பத்திற்கு இடமளிக்காதீர்கள். திட்டமிட்டு செயல்படும் செயல்கள் வெற்றியாகும்.
பூரம்: வேலைப் பளு அதிகரிக்கும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
உத்திரம் 1: அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். அதனால் சிக்கல்களை சந்திக்க நேரும்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4: பணத் தட்டுப்பாட்டின் காரணமாக முயற்சிகள் இழுபறியாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அஸ்தம்: தொழிலில் எதிர்பார்த்த லாபம் காண முடியாமல் போகும். எதிர்பார்த்த வரவு தள்ளிப் போகும்.
சித்திரை 1, 2: பணிபுயிடத்தில் சக ஊழியர்களால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். கவனமுடன் செயல்படுங்கள்.

துலாம்:

சித்திரை 3, 4: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.
சுவாதி: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்கள் செல்வாக்கு உயரும்.
விசாகம் 1, 2, 3: நண்பரால் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: உங்கள் நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
அனுஷம்: தொழிலை விரிவு செய்வீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கேட்டை: எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். பழைய கடன் ஒன்றை அடைப்பீர்கள்.

தனுசு:

மூலம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
பூராடம்: பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.
உத்திராடம் 1: விலகிச் சென்ற உறவினர்கள் உங்கள் உதவியை எதிர்பார்த்து மீண்டும் வருவார்கள்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: செயலில் நெருக்கடி உண்டாகும். உதவி புரிவதாக சொன்னவர்களை சந்திக்க முடியாமல் போகும்.
திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.
அவிட்டம் 1, 2: அலைச்சல் அதிகரிக்கும். வீண் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்.

கும்பம்:

அவிட்டம் 3, 4: மாலை வரை உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள்.
சதயம்: உழைப்பு அதிகரிக்கும். சில தடைகளை சந்தித்தாலும் உங்கள் திறமையால் எண்ணியதை அடைவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: புதிய தொழில் தொடங்கும் முயற்சி தள்ளிப்போகும். எதிர்பார்ப்பில் தடைகள் ஏற்படும்.

மீனம்:

பூரட்டாதி 4: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர்.
உத்திரட்டாதி: நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த நன்மைகளை அடைந்து மகிழ்வீர்கள்.
ரேவதி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

Related posts

05-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

22-10-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

இளநீர் அருந்துவதால் இவ்வளவு நன்மைகளா..!

Tharshi

Leave a Comment