குறும்செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் : மைத்திரி உள்ளிட்டோரின் குற்றம் நிரூபம்..!

இலங்கையில் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பு உச்ச நீதிமன்றால் இன்று வழங்கப்பட்டது.

இந்தத் தாக்குதலை தடுக்க தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸ் மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடாக 100 மில்லியன் ரூபாவை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுத்துறை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ரூ. 50 மில்லியனும் மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் நட்டயீடாக வழங்க வேண்டும் உத்தரவிடப்பட்டது.

Related posts

2வது டி20 : தொடரை கைப்பற்றியது இந்தியா..!

Tharshi

குழந்தைகளுக்கு கண்டிப்பாக தரக்கூடாத உணவுகள் எவையென தெரியுமா..?

Tharshi

இலங்கைக்கு கொவிட் ஒழிப்பு வில்லை : அரசாங்கம் ஆலோசனை..!

Tharshi

Leave a Comment