குறும்செய்திகள்

சிக்கன் ஆம்லெட் : செய்முறை விளக்கம்..!

குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த ரெசிபியை செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

அந்த வகையில், இன்று சிக்கன் ஆம்லெட் செய்வது எப்படியென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டை – 3

சிக்கன் கொத்துக் கறி மசாலா – 100 கிராம்,

வெங்காயம் – 1 பச்சை

மிளகாய் – 1

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிக்கன் கொத்துக் கறி மசாலாவில் இருக்கும் சிக்கனை பிய்ந்து வைக்கவும், ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மற்றும் முட்டையை சேர்த்து நன்கு கலக்கவும்.

இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.

அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முட்டை கலவையை ஊற்றவும்.

மூடிவைத்து மிதமான தீயில் பாதி அளவு முட்டையை வேகவிடவும்.

பிறகு அதில் பிய்ந்து வைத்த சிக்கனை முட்டையின் மேல் தூவி மூடி வைத்து 1 நிமிடம் வேகவிட்டு மறுபக்கம் திருப்பி போட்டு வேக விடவும்.

இப்போது சூப்பரான சிக்கன் ஆம்லெட் தயார்.

Related posts

குழந்தை பிறந்து இரண்டு வயதை எட்டும் வரை கவனிக்க வேண்டியவை..!

Tharshi

அமெரிக்காவின் மீண்டும் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி – 13 பேர் படுகாயம்..!

Tharshi

மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற அஜித்தின் 30 அடி கட் அவுட்..!

Tharshi

1 comment

Leave a Comment