குறும்செய்திகள்

தத்தெடுத்த மகனினால் கொல்லப்பட்ட தாய்..!

குளியலறையில் தவறி விழுந்து தனது தாய் கொல்லப்பட்டதாக காட்ட முயன்ற மகன் ஒருவரை மாத்தறை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

முதலில் தாயை தலையில் கட்டையால் தாக்கி கொல்ல முயன்று காயம் அடைந்தும் சாகாததால் கழுத்தை நெரித்து கொன்றதாக பொலிசார் கூறுகின்றனர்.

பின்னர் அவரது சடலத்தை குளியலறைக்கு எடுத்துச் சென்று அங்கு வைத்து குளியலறையில் தவறி விழுந்து இறந்ததாகக் காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாத்தறை கோவில் மாவத்தையை சேர்ந்த பாத்திமா சரீனா என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவளுக்கு 59 வயது. அவரது 35 வயது மகன் முகமது தஸ்ரி கைஸ் என்பவரால் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த மகனை அந்த பெண் தத்தெடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அவர் திருமணமாகி கொழும்பு தெமட்டகொடையை வசிப்பிடமாகக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பெண் தனது சொத்துக்கள் அனைத்தையும் மகனுக்கு எழுதி வைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெண்ணின் மரணத்தின் பின்னர் அனைத்து சொத்துக்களும் தனக்கு சொந்தமாகி விடும் என்பதால், சொத்துக்களை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளும் நோக்கில் தாயாரை கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனையின்றி தாயின் சடலத்தைப் பெறுவதற்கு இந்த நபர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். ஆனால் தடயவியல் மருத்துவர்கள் அதைச் செய்யாமல் பிரேதப் பரிசோதனையின்போது கழுத்தை நெரித்து மரணம் நிகழ்ந்ததை உறுதி செய்தார்.

அதன்படி சந்தேக நபரை கைது செய்த பொலிசார் விசாரணையில் அனைத்தும் தெரியவந்துள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 418 பேர்  கைது..!

Tharshi

பெங்களூரில் 47 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்தது : மயிரிழையில் தப்பிய 30 தொழிலாளர்கள்..!

Tharshi

திடீர் சந்திப்பில் சம்பந்தனுக்கு மகிந்த வழங்கிய உறுதிமொழி..!

Tharshi

Leave a Comment