குறும்செய்திகள்

மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற அஜித்தின் 30 அடி கட் அவுட்..!

நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பட வெளியீட்டை முன்னிட்டு மலேசியாவில் அஜித்திற்கு 9.144 மீட்டர் உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடிகர் ஒருவருக்காக வைக்கப்பட்ட மிக உயரமான கட் அவுட் இது என கூறப்படுகிறது.

துணிவு படத்தின் முதல் காட்சி நேற்று காலை 8.30 மணிக்கு மலேசியாவில் உள்ள பிஜே எல்எப்எஸ் ஸ்டேட் சினிபிளக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது.

ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடிய நிலையில், திரையரங்கு முன் வைக்கப்பட்ட அஜித்தின் 30 அடி உயர கட் அவுட் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இதற்கான அங்கீகார சான்றிதழ் திரைப்பட விநியோகஸ்தரிடம் வழங்கப்பட்டது.

துணிவு படத்தின் மலேசியா உரிமத்தை அங்குள்ள பிரபல முன்னணி நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் கைப்பற்றியுள்ளது. ரசிகர்களின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Related posts

முதலீட்டுச் சபை (BOI) உறுப்பினர்கள் சிலர் பதவி விலகல்..!

Tharshi

அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் : பிரபல நடிகையில் திடீர் முடிவு..!

Tharshi

அவுஸ்திரேலியாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு..!

Tharshi

Leave a Comment