குறும்செய்திகள்

கட்டணம் அறவிடவுள்ள ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராம்..!

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராமை பாவிப்பதற்கு தற்போது கட்டணங்கள் எவையும் அறவிடப்படுவதில்லை.

எனினும் இதற்கு நேரடியான கட்டணங்களை அறவிடும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட இலட்சினை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக, இந்த நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது.

இதன்படி அங்கீகாரிக்கப்பட்ட கணக்குகளைப் பெறுவதற்கு அரசாங்க அடையாள அட்டையை பயன்படுத்தி, நீலநிற அடையாளத்தையும் பெற்றுக் கொள்வதற்கு 11.99 டொலர் கட்டணமாக பெறப்படும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை இந்த வாரம் முதல் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்தில் நடைமுறைக்கு வருவதுடன், எதிர்காலத்தில் ஏனைய நாடுகளிலும் அமுலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இதே மாதிரியான நடைமுறையை டுவிட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்ததன் பின்னர் ஈலன் மஸ்க் அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இரவுநேர ஊரடங்கு : வெளியான புதிய தகவல்..!

Tharshi

28-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

22-10-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

24 comments

Leave a Comment