குறும்செய்திகள்

அரிதான ஹைபிரிட் சூரிய கிரணம் இவ்வாரம்..!

மிகவும் அரிதான கலப்பு (ஹைபிரிட்) சூரிய கிரகணம் ஒன்று இம்மாதம் 20ம் திகதி ஏற்படவுள்ளது.

இதனை கலப்பு சூரியகிரணம் என்று அழைப்பதற்கான காரணம், இது முழு சூரிய கிரணத்தில் இருந்து, கங்கண அல்லது வளைய சூரிய கிரகணமாக மாறும் என்பதால் ஆகும்.

பூமியைச் சுற்றியுள்ள சந்திரனின் சுற்றுப்பாதை நீள்வட்டமாக இருப்பதால், பூமியிலிருந்து சந்திரனின் தூரம் அதன் சராசரி மதிப்பிலிருந்து சுமார் 6சதவீதம் மாறுபடுவதினாலேயே இந்த நிலைமை ஏற்படவுள்ளது.

எனவே, சந்திரனின் வெளிப்படையான அளவு பூமியிலிருந்து அதன் தூரத்தைப் பொறுத்து மாறுபடும். இந்த விளைவுதான் முழு மற்றும் வளைய கிரகணங்களுக்கு இடையில் மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.

துரதிஷ்டவசமாக, இந்த கிரகணத்தை இலங்கை மற்றும் உலகின் பல பகுதிகளுக்கும் பார்க்க முடியாது. இருப்பினும், மேற்கு அவுஸ்திரேலியா, கிழக்கு திமோர் மற்றும் கிழக்கு இந்தோனேசிய தீவுகளில் ஒரு சில பகுதிகளுக்கு கிரகணம் தெரியும்.

உலக மக்கள் தொகையில் 8.77 சதவீத பேருக்கு மட்டுமே இந்த கிரகணம் தெரியும்.

இலங்கை நேரப்படி, ஏப்ரல் 20 அன்று இந்தியப் பெருங்கடலில் காலை 7.04க்கு கிரகணம் தொடங்கி மதியம் 12.29க்கு பசிபிக் பெருங்கடலில் இது முடிவடையும்.

சூரியன் முழு கிரகணத்தில் இருந்து வளைய கிரகணத்துக்கு உட்படுவதை பார்க்கக்கூடிய இரண்டு இடங்கள் மட்டுமே உள்ளன. இருப்பினும், இந்த இடங்கள் துரதிர்ஷ்டவசமாக கடலின் நடுவில் உள்ளன.

கலப்பின கிரகணங்கள் மிகவும் அரிதானவை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 3, 2013 அன்று கடைசி கலப்பு கிரகணம் ஏற்பட்டது.

அடுத்த கலப்பு சூரிய கிரகணம் நவம்பர் 2031இல் நிகழும்.

இந்த கிரகணத்தை இலங்கையில் காண முடியாவிட்டாலும், பல இணையத்தளங்கள் மூலம் இதனை நேரடியாக அவதானிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா கசிந்ததா..? : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Tharshi

The 10 Runway Trends You’ll Be Wearing This Year

Tharshi

கொவிட்டில் இருந்து மீண்டவர்களுக்கு உருவாகும் நரம்பியல் நோய் அபாயம்..!

Tharshi

Leave a Comment