இலங்கைக்கே உரித்தான செங்குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சர் மகிந்த அமரவீரவினால் முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கிடையில், இவ்வகைக் குரங்குகளை வழங்குமாறு அமெரிக்காவிலிருந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அமெரிக்காவுக்கு எத்தனை குரங்குகள் தேவை என்பது குறித்த விபரங்கள் இதுவரையில் சொல்லப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2 comments