சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு QR குறியீட்டின் அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், புத்தாண்டின் பின்னர் இந்த ஒதுக்கம் மீண்டும் வழமைப்போல குறைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர், இந்த விடயத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பான இறுதி தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.