துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகளுடன் பயணித்த கார் எதிரே வந்த காருடன் மோதிய விபத்தில் 06 அகதிகள் பலியாகியுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் தெரியவருகையில்..,
துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகள் காரில் பயணம் செய்தனர். அவர்கள் துருக்கி- கிரீஸ் எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது அங்கு பொலிசாரை கண்டனர்.
எனவே அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக தவறான பக்கத்தில் அதாவது சாலையின் மறுபுறமாக சென்றனர்.
அப்போது எதிரே வந்த மற்றொரு கார் எதிர்பாராதவிதமாக மோதினர். இதில் காரில் இருந்த டிரைவர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.