குறும்செய்திகள்

“800” திரைப்படத்தின் பெஸ்ட் லுக் ரிலீஸ்..!

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “கனிமொழி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் உருவான, கிரிக்கெட் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான “800” திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் “ஸ்லம்டாக் மில்லியனர்” படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடிக்கிறார்.

மேலும், மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோஹிதாஷ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது.

இதையடுத்து “800” படத்தின் முதல் தோற்ற போஸ்டர் முத்தையா முரளிதரனின் பிறந்த நாளான இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

மேலும், “800” திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவுக்கு 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் பிசிசிஐ..!

Tharshi

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்..!

Tharshi

ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த முன்னனி அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

1 comment

Leave a Comment