குறும்செய்திகள்

எண்ணெய் கப்பலை கைப்பற்றியதா..? : ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு..!

US says Iran briefly seizes oil tanker near Strait of Hormuz

ஹார்முஸ் ஜலசந்தி அருகே எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக, ஈரான் கடற்படையினர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா திடீரென தானாக விலகிக் கொண்டதில் இருந்து, அவ்விரு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

மேலும், மத்திய கிழக்கு பகுதியில், அதிலும் குறிப்பாக பாரசீக வளைகுடா பகுதியில் செல்கிற கப்பல்களை ஈரான் இலக்காக கொண்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் ஹார்முஸ் ஜலசந்தி அருகே லைபீரியா கொடியேந்தி எம்.வி.விலா என்ற எண்ணெய் கப்பல் வந்து கொண்டிருந்தது. அந்த எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் ஒரு ஹெலிகாப்டரில் வந்து கைப்பற்றியதாகவும், 5 மணி நேரம் தங்கள் பிடியில் வைத்திருந்து விட்டு விடுவித்து விட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தி உள்ளது.

அதே நேரத்தில் அந்த எண்ணெய் கப்பலில் இருந்து எந்த ஒரு துயர அழைப்பும் வரவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும் அந்த எண்ணெய் கப்பலை எதற்காக ஈரான் கைப்பற்றியது என்பது குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

எனினும் இவ் விவகாரம் ஈரான், அமெரிக்கா இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

< Most Related News >

Tags :-US says Iran briefly seizes oil tanker near Strait of Hormuz

Related posts

கொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி தெரியுமா..!

Madhu

நீர்வேலியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி காதலனுடன் கைது..!

Madhu

“அப்பா.. தண்ணி குடிச்சீங்களா? – இறந்த மகனின் கேள்விகள் : மகனுக்காக விவேக்கின் உருக வைக்கும் கட்டுரை..!

Madhu

70 comments

Leave a Comment