குறும்செய்திகள்

இங்கிலாந்தில் இருந்து 18 டன் மருத்துவ உபகரணங்களுடன் டெல்லி வந்தடைந்த சரக்கு விமானம்..!

British Airways flight carrying 18 tonnes of aid arrives in India

இந்தியா தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருவதுடன், தினந்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதால் நாடு முழுவதும் உயிர்காக்கும் ஆக்சிஜன் உட்பட பல்வேறு மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி புரிந்து வருகின்றன.

அந்த வகையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் 18 டன் மருத்துவ உபகரணங்களுடன் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தது.

இது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,

“இங்கிலாந்தின் பல்வேறு தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட நூற்றுக்கணக்கான ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்பட மொத்தம் 18 டன் எடை கொண்ட மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானம் மூலம் இந்தியா கொண்டு சேர்க்கப்பட்டது” எனக் கூறப்பட்டுள்ளது.

British Airways flight carrying 18 tonnes of aid arrives in India

Related posts

கொழும்பில் நூற்றுக்கு 100 வீதம் டெல்டா வைரஸ்..!

Tharshi

நாட்டில் மேலும் 679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 31 பேர் பலி..!

Tharshi

தவறாக பேசியதால் வாலிபரை வெட்டிக்கொன்று கடலில் வீசிய நண்பன்..!

Tharshi

Leave a Comment