குறும்செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை : இதுவரை 14 பேர் மரணம் – 2 பேரை காணவில்லை..!

Death toll rises to 20 due to inclement weather

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 14 பேர் மரணமாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், இரத்தினபுரி மற்றும் கம்பஹாவில் 2 பேரை காணவில்லை என நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி, குருணாகல், காலி ஆகிய 10 மாவட்டங்களில் 60,674 குடும்பங்களைச் சேர்ந்த 245,212 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, 3,520 குடும்பங்களைச் சேர்ந்த 15,658 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 794 குடும்பங்களைச் சேர்ந்த 3,397 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், 14 வீடுகள் முற்றாகவும், 817 வீடுகள் பகுதியளவிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

14 killed due to inclement weather in the country

Related posts

27-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

50 Tips and Insights About Productivity, Happiness, and Life

Tharshi

வேலை தேடு அல்லது வெளியே போ என கூறிய தந்தை : ஆத்திரத்தில் குடும்பத்தினரை காலி செய்த மகன்..!

Tharshi

Leave a Comment