குறும்செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து போட்டி நாளை ஆரம்பம் : 24 நாடுகள் பங்கேற்பு..!

The 24 nation European football tournament kicks off tomorrow

ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்த மிகவும் பிரசித்தி பெற்றது ஐரோப்பிய கோப்பை போட்டியாகும்.

உலக கோப்பையை போலவே ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 16 வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நாளை (11 ஆம் திகதி) தொடங்குகிறது. ஜூலை 11 ஆம் திகதி வரை ஒரு மாத காலம் இந்த போட்டி நடக்கிறது.

யூரோ கோப்பை போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் வருமாறு :-

குரூப் ஏ:- துருக்கி, இத்தாலி, வேல்ஸ், சுவிட் சர்லாந்து.

குரூப் பி:- டென்மார்க், பின்லாந்து, பெல்ஜியம், ரஷியா.

குரூப் சி:- நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரியா, வடக்கு மாசி டோனியா.

குரூப் டி:- இங்கிலாந்து, குரோஷியா, ஸ்காட்லாந்து, செக்குடியரசு.

குரூப் இ:- ஸ்பெயின், சுவீடன், போலந்து, சுலோ வாக்கியா.

குரூப் எப்:- அங்கேரி, போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜெர்மனி.

இத்தாலி தலைநகர் ரோமில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள துருக்கி – இத்தாலி அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். 6 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும். ஒவ்வொரு பிரிவிலும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகளில் சிறந்த 4 அணிகளும் 2 வது சுற்றுக்கு முன்னேறும்.

எதிர்வரும் 23 ஆம் திகதி வரை லீக் ஆட்டங்கள் நடக்கிறது. 2 வது சுற்று ஆட்டங்கள் 26 முதல் 29 ஆம் திகதி வரையிலும், கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகளிலும், அரை இறுதி 6 மற்றும் 7ஆம் திகதி களிலும் நடக்கிறது. இறுதி போட்டி ஜூலை 11ஆம் திகதி லண்டனில் நடக்கிறது.

யூரோ கோப்பை போட்டிகள் லண்டன் (இங்கிலாந்து), ரோம் (இத்தாலி), பகு (அசர்பெய்ஜான்), முனிச் (ஜெர்மனி), செயின்ட் பீட்டர்ஸ் பர்க் (ரஷியா), ஆம்ஸ்டர்டாம் (நெதர் லாந்து), புகாரெஸ்ட் (ருமேனியா), புடாபெஸ்ட் (அங்கேரி), கோபன்ஹேகன் (டென்மார்க்), கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து), செவில்லி (ஸ்பெயின்) ஆகிய 11 நகரங்களில் போட்டி நடக்கிறது.

லண்டன் வெம்பர்லி மைதானத்தில் இறுதிப்போட்டி, 2 அரை இறுதி, 2-வது சுற்று ஆட்டம் மற்றும் லீக் ஆட்டங்கள் நடக்கிறது.

ஏற்கனவே வென்ற நாடு கோப்பையை வெல்லுமா? புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்ற ஆவலுடன் ரசிகர்களால் எதிர்ர்க்கப்படுகிறது.

இதில் விளையாடும் அனைத்து நாடுகளும் திறமையானது. இதனால் இந்த போட்டி தொடர் விறுவிறுப்பாக இருக்கும்.

மேலும், ஐரோப்பிய கால்பந்து போட்டி சோனி டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

The 24 nation European football tournament kicks off tomorrow

Related posts

லாஸ்லியாவின் நடிப்பில் உருவாகும் கூகுள் குட்டப்பா பட டீசர்..! (Video)

Tharshi

09-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து உற்பத்தி ஆரம்பம்..!

Tharshi

Leave a Comment