குறும்செய்திகள்

2021 இன் முதல் கங்கண சூரிய கிரகணம் : கனடா – ரஷ்யா நாடுகளில் முழுமையாக தெரிந்தது..!

Nasa shares mesmerizing photos of Eclipse

2021 ஆம் ஆண்டின் முதல் கங்கண சூரிய கிரகணம் கனடா, ரஷ்யா, கிரீன்லாந்து உள்ளிட்ட நாடுகளில் முழுமையாக தெரிந்தது.

சந்திர கிரகணம் நிகழ்ந்து 15 நாட்களில் சூரிய கிரகணம் நிகழும். அதன்படி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழும் என நாசா அறிவித்திருந்தது.

அந்தவகையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், கடந்த மே 26 ஆம் திகதி நிகழ்ந்தது. வழக்கமாக சந்திர கிரகணம் நிகழ்ந்து 15 நாட்களில் சூரிய கிரகணம் நிகழும். அதன்படி, ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழும் என நாசா அறிவித்தது.

இந்நிலையில், ஆண்டில் முதல் கங்கண சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி பிற்பகலில் தொடங்கியது. கங்கண சூரிய கிரகணம், கனடா, ரஷ்யா, கிரீன்லாந்து ஆகிய நாடுகளில் முழுமையாக தெரிந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பகுதியளவு தெரிந்தது.

மேலும், கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பகுதியாக தெரிந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன், இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் மட்டும் சிறிது நேரம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Nasa shares mesmerizing photos of Eclipse

Related posts

பெரிய திரைக்காக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் லீக் செய்யும் சின்னத்திரை நடிகை..!

Tharshi

சூப்பர் சிங்கர் 8 டைட்டில் வின்னர் யார் தெரியுமா..!

Tharshi

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் : இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி..!

Tharshi

Leave a Comment