குறும்செய்திகள்

கர்ப்ப காலத்தில் வரும் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்..!

Ways to reduce stress during pregnancy

கர்ப்ப காலத்தில் வரும் மன அழுத்தத்தின் பாதிப்பு நம்மை மட்டுமல்லாமல், நம் குழந்தையையும் சேர்த்து பாதிக்கும். நமக்குப் பிடித்த விடயத்தை நாம் செய்ய ஆரம்பித்தால் கண்டிப்பாக மன அழுத்தமோ, சோர்வோ இருக்காது.

எல்லா பெண்களுக்கும் மன அழுத்தம் வருவது இப்போது ரொம்ப இயல்பாகி விட்டது. அதுவும் கர்ப்ப காலத்தில் வரும் மனஅழுத்தத்தோட பாதிப்பு நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்த்து பாதிக்கும். கர்ப்ப காலத்துல மன அழுத்தம் வருவதற்க்கு முக்கிய காரணமான ஹார்மோன் சமநிலையை சொல்லலாம். பிறகு வாந்தி, தூக்கமின்மை, அல்லது ரொம்ப நேரம் தூங்கறது, சாப்பிட பிடிக்காமல் இருப்பது மற்றொரு முக்கியமான ஒன்று வீட்டுச்சூழல். இப்படி பல காரணங்கள் உண்டு.

மன அழுத்தம் தவிர்க்க இந்த கர்ப்ப காலத்தில் நம்மைச் சுற்றி நல்ல விஷயங்களை மட்டுமே பேசவது போன்று பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் தேவையில்லாத பயத்தை, கோபத்தை ஏற்படுத்துபவர்களிடம் கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது.

எந்த எதிர்மறையான விஷயங்களும் நம் மனசுக்குள்ளே போகாமல் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் அல்லது அப்படியே போனாலும் அதிலிருந்து உடனே வெளிவர உங்களுக்குப் பிடித்த விஷயத்தை செய்யும் போது எளிதாக அந்த மனநிலையில இருந்து வெளியில் வர முடியும்.

உங்கள் கணவருடன் மாலை நேரத்தில் கண்டிப்பா ஒரு நடைப்பயிற்சி செல்லுங்கள். அப்படி போகும் போது அவர் கூட மகிழ்ச்சியான விஷயங்களை மட்டும் பேசிக் கொண்டே செல்லுங்கள்.

மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர உதவுவதில் உணவு ஒரு நல்ல மருந்தாகும். ஒமேகா 3 அதிகமா இருக்கிற வால்நட் (walnut), அளவாக டார்க் சாக்லேட் கூட சாப்பிடலாம். இவையெல்லாம் நம் மன நிலைமையை சரி பண்ணுவதற்கான உணவுகள் ஆகும்.

குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மன அழுத்தம் இருக்கின்றது என்றால், நீங்கள் கண்டிப்பாக யோகா, மூச்சு பயிற்சி, தியானம் பண்ணலாம். நடந்த கசப்பான சம்பவங்களை நினைக்காமல் நம்ம குழந்தைக்காக நேர்மறையான விஷயங்களை மட்டும் யோசிக்கவோ இல்லையென்றால் பேசவோ பழகிக் கொள்ளுங்கள். இது நிச்சயமாக உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும்.

இப்படி நமக்கு பிடிச்ச விஷயத்தை நாம் செய்ய ஆரம்பித்தால் கண்டிப்பாக மன அழுத்தமோ, சோர்வோ இருக்காது.

Ways to reduce stress during pregnancy

Related posts

12500 பவுண்டுகள் செலவில் நாயாக மாறிய நபர்..!

Tharshi

புயல் எச்சரிக்கை : கொரோனா சிறப்பு முகாம்களில் உள்ள நோயாளிகளை வேறு முகாமிற்கு மாற்ற அறிவுறுத்தல்..!

Tharshi

இலங்கையில் மேலும் 2,173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment