குறும்செய்திகள்

ஜி-7 உச்சி மாநாட்டில் வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி..!

Queen of England cuts cake with sword at G7 event

ஜி-7 உச்சி மாநாட்டின் போது நடைபெற்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கலந்து கொண்டு வாளால் கேக் வெட்டி மகிழ்ந்துள்ளார்.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு “ஜி-7” என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த கூட்டமைப்பின் 47 வது உச்சி மாநாடு, இங்கிலாந்து கார்ன்வால் மாகாணத்தில் உள்ள கார்பிஸ் பே ஓட்டலில் நேற்று தொடங்கியது.

இந்நிகழ்வில், இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத்தும் கலந்து கொண்டார். அவருடன் இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவி கெமில்லா மற்றும் பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ராணி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, குடும்பத்துடன் இங்கிலாந்து ராணி கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு இதுவாகும்.

இந்நிகழ்வின் போது, ஜி 7 கூட்டமைப்பின் தலைவர்கள், ராணியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். புகைப்படம் எடுக்கையில், ராணி 2 ஆம் எலிசபெத் நகைச்சுவையாகப் பேசி, அனைத்துத் தலைவர்களையும் சிரிக்க வைத்து மகிழ்ந்தார்.

மாநாட்டிற்கிடையில், 2 ஆம் எலிசபெத் கேக் வெட்டும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் சிறப்பம்சமாக ராணி வாள் கொண்டு கேக் வெட்டியது அனைவரயும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

Queen of England cuts cake with sword at G7 event

Related posts

ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரம் : நடிகர் விஜய் மேல் முறையீடு..!

Tharshi

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 275 ரன்னில் ஆல் அவுட்..!

Tharshi

தீரா கஷ்டங்களை தீர்க்கும் வெள்ளிக்கிழமை புன்னை பூ அம்பாள் வழிபாடு..!

Tharshi

Leave a Comment