குறும்செய்திகள்

உலகின் மிக நீண்ட கண் இமைகள் : சீன பெண் கின்னஸ் சாதனை..!

The worlds longest eyelids Chinese woman Guinness

சீன பெண் ஒருவர் 8 அங்குல நீள கண் இமைகளுடன் 5 ஆண்டுகளுக்கு பின் சொந்த சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

மிக நீண்ட கண் இமைகளை வளர்த்து சீனாவை சேர்ந்த யூ ஜியாங்சியா என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது இமைகளின் மொத்த நீளம் 8 அங்குலம் ஆகும். கடந்த 2016 ஆம் ஆண்டில் ஏற்படுத்திய சொந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். இதற்காக தொடர்ந்து அவற்றை வளர்த்து வந்துள்ளார்.

இதுபற்றி கூறும் ஜியாங்சியா கூறுகையில்..,

“எனக்கு ஏன் இவ்வளவு நீண்ட கண் இமைகள் இருக்கின்றன என நான் யோசித்ததுண்டு. சில ஆண்டுகளுக்கு முன் மலை பகுதியில் 480 நாட்கள் வரை வசித்து வந்தேன்” என, கூறுகிறார்.

ஊசி போல் அதனை நீட்டி கொள்கிறார். உலகின் மிக நீண்ட கண் இமைகளை கொண்ட பெண் என்ற பெருமையை பெற்று, கின்னஸ் சாதனை படைத்துள்ள அவர் தொடர்ந்து கூறும்பொழுது, இது நிச்சயம் கடவுள் புத்தர் அளித்த பரிசாகவே இருக்கும்.

இதனால் எனது அன்றாட வாழ்க்கையில் எந்த சங்கடமும், பாதிப்பும் ஏற்படவில்லை. அதற்கு பதிலாக, எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியே ஏற்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

The worlds longest eyelids Chinese woman Guinness

Related posts

2022 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி ஆடுவார் : தலைமை செயல் அதிகாரி தகவல்..!

Tharshi

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

Tharshi

மைக்ரோசாப்ட் உருவாக்கி வரும் புது கேமிங் சேவை விரைவில் அறிமுகம்..!

Tharshi

Leave a Comment