குறும்செய்திகள்

கொழும்பில் Uber Eats மூலம் உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்..! (ஆதாரம் இணைப்பு)

A warning to those who order food through Uber Eats in Colombo

கடந்த சில நாட்களாக கொழும்பில் “Uber Eats” இன் ஊடாக உணவை ஏடிஎம் கார்ட் மூலமாக பணம் செலுத்தி, ஆன்லைனில் ஆர்டர் செய்த பின், அவர்கள் உணவை ஆர்டர் செய்தவர்களுக்கு வழங்காமல், ஆர்டரை கொடுத்து முடித்ததாக கண்காணிப்பு தகவல் (Tracking) மூலமாக  தெரிவிக்கின்றனர்.

ஆர்டரை கொடுத்து முடித்ததாக, ஆர்டர் செய்தவருக்கு கண்காணிப்பு தகவல் (Tracking) மூலமாக செய்தி வந்த பின், “Uber Eats” இன் டெலிவரி பாய் (Delivery Boy) உடைய தொலைபேசி இலக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் உணவை ஆர்டர் செய்தவர்கள், காசும் இல்லாமல் உணவும் இல்லாமல் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

அத்துடன், வெளிநாட்டில் இருக்கும் உறவுகள் இலங்கையில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு இந்த பயணத்தடை காலங்களில், அங்கிருந்து “Uber Eats” மூலமாக உணவுகளையும், உலர் உணவுப் பொருட்களையும் அவர்களது ஏடிஎம் கார்ட் மூலமாக பணம் செலுத்தி ஆர்டர் செய்தும் அவர்களுக்கு அந்த பொருட்கள் போய் சேர்வதில்லை. அதனால் அவர்கள் அங்கிருந்து  “Uber Eats” னை தொடர்பு கொள்ள முயற்சித்தால், அவர்களது தொடர்பு துண்டிக்கப்படுகின்றது. இதற்கு யார் பொறுப்பு..?

இந்த இடர்கால சூழ்நிலையில், மக்கள் தமது அன்றாட உணவுகளை பெற்றுக் கொள்வதில் அதிக சிரமப்பட்டு வரும் நிலையில், “Uber Eats” தங்களது இந்த அசிங்கமான செய்வதனால், இது அனைவரின் கவனத்துக்குள் கொண்டு வருவது எமது கடமை.

எனவே மக்கள் அனைவரும் இந்த “Uber Eats” மூலம் உணவுகளோ அல்லது வேறு பொருட்களையோ கார்ட் மூலமாக ஆர்டர் செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

A warning to those who order food through Uber Eats in Colombo

Related posts

யாழ். மட்டுவில் பகுதியில் கொவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் பலி : பெரும் பதற்ற நிலை..!

Tharshi

Facebook’s $100 billion-plus Rout is The Biggest Loss in Stock Market History

Tharshi

Worried About the I.R.S. Scam? Here’s How to Handle Phone Fraud

Tharshi

Leave a Comment