குறும்செய்திகள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளால் ஏற்பட்ட முதல் மரணம்..!

India confirms first death following Covid19 vaccination

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் பக்க விளைவுகளால் முதல் மரணத்தை இந்தியா உறுதி செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,95,70,881 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 2726 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,82,80,472 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,17,525 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,13,378 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 25 கோடியே 90 லட்சத்து 44 ஆயிரத்து 072 ஆக உள்ளது

ஜனவரி முதல் அடுத்தடுத்தக் கட்டமாக வயது வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி முதல் இன்று (ஜூன் 15) வரை 151வது நாளாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இன்று காலை 10:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவீதம் பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 30.7 சதவீதம் பேருக்கும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோர்களில் 9.3 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வரும் அரசு குழு (ஏஇஎப்ஐ) தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் அனாபிலாக்ஸிஸ் காரணமாக முதல் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் குறித்து இந்த குழுவினால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இது போன்ற 31 பக்கவிளைவு கொண்டவர்களை ஆய்வுக்கு எடுத்து கொண்டது

இந்த குழுவின் மார்ச் 8, 2021 இல் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் 68 வயதான ஒருவர் அனாபிலாக்ஸிஸ் (கடுமையான ஒவ்வாமை எதிர்வினை) காரணமாக இறந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

India confirms first death following Covid19 vaccination

Related posts

27-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

31-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து உற்பத்தி ஆரம்பம்..!

Tharshi

Leave a Comment