குறும்செய்திகள்

800 கிலோ மாட்டு சாணம் காணவில்லை : சத்தீஷ்காரில் பரபரப்பு புகார்..!

Complaint of missing cow dung in Chhattisgarh

சத்தீஷ்காரில் 800 கிலோ மாட்டு சாணம் காணவில்லை என அளித்த புகாரின் பேரில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்காரில் கோதான் நியாய யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மாநில அரசு, ஒரு கிலோ ரூ.2 என மாட்டு சாணம் கொள்முதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த அறிவிப்பினை முன்னிட்டு கிராம மக்கள் மாட்டு சாணம் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோர்பா மாவட்டத்தில் துரனா கிராமத்தில் 800 கிலோ எடை கொண்ட மாட்டு சாணம் களவு போயுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1,600 ஆகும்.

இதுபற்றி தீப்கா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Complaint of missing cow dung in Chhattisgarh

Related posts

நேற்றைய தினத்தில் நாட்டில் 167 பேர் கொரோனா தொற்றுக்கு பலி..!

Tharshi

நாட்டில் இன்று இதுவரை மட்டும் 2008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

25 கோடி முறை பார்த்து வெற்றிநடை போடும் “எஞ்ஜாய் எஞ்சாமி” பாடல்..!

Tharshi

Leave a Comment