குறும்செய்திகள்

கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடலை அறிமுகம் செய்துள்ள சாம்சங் நிறுவனம்..!

Samsung Galaxy Chromebook Go with Intel

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடல் வைபை மற்றும் எல்டிஇ ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது பட்ஜெட் பிரிவில் க்ரோம் ஒஎஸ் கொண்ட லேப்டாப் ஆகும். இது வைபை மற்றும் எல்டிஇ ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடலில் 14 இன்ச் TFT LCD ஸ்கிரீன், இன்டெல் செலரான் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 42.3Wh பேட்டரி மற்றும் 45W யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் கோ அம்சங்கள் :

– 14 இன்ச் 1366×768 பிக்சல் HD TFT (16:9) டிஸ்ப்ளே
– இன்டெல் செலரான் N4500 பிராசஸர்
– இன்டெல் UHD கிராபிக்ஸ்
– 4 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி /128 ஜிபி eMMC மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– க்ரோம் ஒஎஸ்
– 720 பிக்சல் HD கேமரா
– ஸ்டீரியோ ஸ்பீக்கர்ககள், 3.5mm ஹெட்போன் ஜாக்
– 4ஜி LTE, வைபை , 2×2 MIMO, ப்ளூடூத் v5.1
– 2 x யுஎஸ்பி டைப் சி, 1 x யுஎஸ்பி 3.2, நானோ செக்யூரிட்டி ஸ்லாட்
– 42.3Wh பேட்டரி
– 45W யுஎஸ்பி டைப் சி சார்ஜிங்

மேலும், சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் கோ சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Samsung Galaxy Chromebook Go with Intel

Related posts

இந்த மாத இறுதியில் முன்பள்ளிப் பாடசாலைகள் திறக்கப்படும்..!

Tharshi

யாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 16 பேர் தனிமைப்படுத்தலில்..!

Tharshi

“கடவுளின் கை” : விண்வெளியில் தோன்றிய ஒளி மூட்டம்..!

Tharshi

Leave a Comment