குறும்செய்திகள்

மொபைல் ஸ்கிரீன் மூலம் கொரோனா சோதனை : விரைவில் அறிமுகம்..!

Corona testing by mobile screen

குறைந்த விலையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா எனக் கண்டறியும் வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதாவது, மொபைல் போன் ஸ்கிரீன் மீது இருக்கும் மாதிரிகளை கொண்டு ஒருவருக்கு கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளும் வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஸ்மார்ட்போன் திரையில் இருந்த ஸ்வாப்களை ஆய்வுகளில் பயன்படுத்தினர். ஆய்வில் பிசிஆர் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டபவர்களின் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்வாப்களை சோதனை செய்தனர். இரு சோதனைகளிலும் தொற்று உறுதியாகி இருந்தது.

போன் ஸ்கிரீன் டெஸ்டிங் (PoST) என அழைக்கப்படும் புது வழிமுறையை கொண்டு கொரோனாவைரஸ் தொற்றை 81 முதல் 100 சதவீதம் வரை சரியாக கண்டறிய முடிகிறது. வழக்கமான பிசிஆர் சோதனையை விட இந்த சோதனைக்கான செலவு குறைவு தான். குறைந்த விலை மட்டுமின்றி சோதனையில் தற்போது இருக்கும் அசௌகரியத்தை தவிர்க்க இந்த சோதனை வழி செய்கிறது.

மேலும், இந்த சோதனையில் ஒரே நிமிடத்தில் மாதிரியை சேகரிக்க முடியும். இதனை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் யாரும் தேவையில்லை. இந்த ஆய்வு முடிவுகள் இ-லைப் எனும் இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

Corona testing by mobile screen

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள மிகுந்த ஆவலுடன் உள்ளேன் : உதய கம்மன்பில..!

Tharshi

பொன்னியின் செல்வன்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!

Tharshi

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை 7 ஆம் திகதி வரை விசாரிக்க மும்பை கோர்ட் உத்தரவு..!

Tharshi

Leave a Comment