குறும்செய்திகள்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை தகவல்..!

Warning information issued by the Asela Gunawardena

தற்போது பதிவாகும் கொவிட் தொற்றாளர்களில் அதிகரிப்பு ஏற்பட்டால் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..,

“தற்போது நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 200 வரையிலான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இதன் காரணமாக பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் கடந்த இரண்டு மூன்று நாட்களில் அவதானித்ததற்கு அமைய மக்கள் சுகாதார வழிமுறைகளை மீறி செயற்படுவதை அவதானிக்க முடிந்தது. இவ்வாறு நீடித்தால் நோயாளர்கள் மீண்டும் அதிகரிக்கக் கூடும். பின்னர் கடுமையான பயணக் கட்டுப்பாட்டினை விதிக்க வேண்டி ஏற்படும்” என தெரிவித்தார்.

Warning information issued by the Asela Gunawardena

Related posts

புதிய ஐபேட் ப்ரோ மாடல்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி அறிமுகம்..!

Tharshi

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்..!

Tharshi

ரஜினிகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

Tharshi

8 comments

Leave a Comment