குறும்செய்திகள்

மனதின் சுமையை குறைக்க உதவும் புன்னகை..!

A smile that helps reduce the burden on the mind

மன இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை, எதனால் எப்படி தோன்றியது..? எப்படி போக்குவது..? என்று தெரியாமல் பலர் குழப்பம் அடைபவர்கள்.

“வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பார்கள்”. அது நூறு சதவீதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனதில் மகிழ்ச்சி குறைய, குறைய உடல் நலமும் பாதிக்க தொடங்கும்.

மன இறுக்கம், மனச்சோர்வு, மனஉளைச்சல், மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படி தோன்றியது? எப்படி போக்குவது? என்று தெரியாமல் குழப்பம் அடைபவர்கள் பலர்.

இந்த மன இயல்பு மாற்றத்துக்கு மா மருந்தாக இருப்பது சிரிப்பு. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்றிருக்கையில் ஏன் வாய் மூடி இருக்க வேண்டும். மருந்துகளுக்கு எல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் சிரிப்பு என்றும் மருந்தே நோய்களை விரைவாக குணப்படுத்துகிறது. நோய்களை போக்கவும் மீண்டும் அவை வராமல் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தருகிறது சிரிப்பு. உடலில் நோய் எதிர்ப்பு என்னும் சக்தியாக செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு.

சிரிப்பை கேட்டால் வெள்ளை அணுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. உடலில் உள்ள நரம்புகள் ஒரு வகையான ரசாயனத்தை வெளியிட்டு கொண்டிருக்கின்றன. சிரிக்கும் போது அந்த ரசாயனம் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது.

மேலும் நாம் சிரிக்கும் போது மூக்கில் உள்ள சளியில் இம்யூனோகு ளோபுலின் 8 ஏ என்னும் நோய் எதிர்ப்பு பொருள் அதிகரி க்கின்றது. அதனால் பாக்டீரியா வைரஸ், புற்று நோய் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாதவாறு தடுக்கப்படுகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு அதிகரிப்பதனாலேயே மாரடைப்பு மற்றும் இதய நோய் கள் ஏற்படுகின்றன.

இது போன்ற அபாயகரமான நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால் நாள்தோறும் குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது சிரித்து பழக வேண்டும். நகைச்சுவை படங்கள், கதைகள், சொற்பொழிவுகள் போன்றவற்றை கேட்டு சிரிக்க வேண்டும். சிரிப்பினால் ரத்தம் தூய்மையாகிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. நுரையீரல் நன்றாக செயல்படுகிறது.

எனவே நோய் வராமல் தடுக்கவும், வந்த நோயில் இருந்து விடுபடவும் சிரித்து பழகுங்கள். சிரிப்பில் பல வகை இருந்தாலும் மகிழ்ச்சிக்காக சிரிக்கும் சிரிப்பே சிரிப்பு. நகைச் சுவைக்காகவும் பிறரை கேலி செய்வதற்காகவும் சிரிப்பு பயன்படுகின்றது.

சிலரது நகைச்சுவை, சிந்தனையை தூண்டக்கூடியதாகவும், அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும். சிலரது நகைச்சுவை பொருள் பொதிந்ததாகவும் இருக்கும். பிறர் மனதை புண்படுத்தாமல் நகைச்சுவையினால் ஏற்படக்கூடிய சிரிப்பு மனதுக்கு ஊட்டமாக அமைகிறது. மனதின் சுமையை குறைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை புத்துணர்ச்சியை தருகிறது. நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாக இருக்கும். உறவு பலமாக இருக்கும். புன்னகை என்பது ஆன்மாவின் உருவம். கண்ணுக்கு தெரியாமல் உள்ளுக்குள் மறைந் திருக்கும் ஆன்மா, தனது அழகை வெளிப்படுத்தும் போது புன்னகை தோன்றுகிறது.

மேலும், ஆன்மா உடலுக்கு எவ்வளவு முக்கியமோ, அதை போல் உடல் நலத்துக்கு ஆன்மா வழங்கும் புன்னகை முக்கியம். சிரிப்பினால் உடல் நலம்பெறும்.சிரிப்பினால் செல்வம் பெருகும். சிரிப்பினால் இந்த உலகம் உள்ளங்கைக்குள் வரும் என்பதை கண்கூடாக காணலாம்.

மனதுக்கு என்று இருக்கும் ஒரே மருந்து சிரிப்பு மட்டும்தான். அந்த சிரிப்பு மருந்து கசப்போ, புளிப்போ, உவர்ப்போ, துவர்ப்போ இல்லை. சிரிப்புக்கு என்றிருப்பதும் ஒரே சுவை அது இனிப்பு.

இனிப்பு பிடிக்கும் போது சிரிப்பு பிடிக்காமல் இருக்குமா? சிரியுங்கள், சிரிக்க சிரிக்க மலரும் தாமரை போல் மனம் மலர்ந்து மணம் வீச தொடங்கும் என்பது நிதர்சனமான உண்மை.

A smile that helps reduce the burden on the mind

Related posts

The future steps of Scala – What to expect from upcoming releases

Tharshi

29-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

சனிப்பெயர்ச்சி 2023 பலன்கள் : உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி..!

Tharshi

35 comments

Leave a Comment