குறும்செய்திகள்

பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்ப்பவை..!

Expecting children from Parents

கல்வி அறிவு இல்லாவிட்டாலும்கூட, தங்களது பொது அறிவை மேம்படுத்தி குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து அவர்களை திருப்திப்படுத்தும் பெற்றோராக இருப்பது இன்று அவசியமாகிறது.

பிள்ளைகள் அழகாக இருக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகிறார்கள். அதேபோல் தங்கள் பெற்றோரும் அழகாக இருக்க வேண்டும் என்று பிள்ளைகளும் விரும்புகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் இன்னும் ஒரு படி மேலே போய், பெற்றோர்கள், பலரும் மெச்சும் அளவுக்கு புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், சமூகத்திலும் பலரால் மதிக்கப்படக்கூடிய அந்தஸ்துடன் அவர்கள் வாழவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். பெற்றோரின் அழகும், அந்தஸ்தும் தங்களுக்கு தனி கவுரவத்தைக் கொடுப்பதாக கருதுகிறார்கள்.

பெற்றோர் புத்திசாலிகளாக இருந்தால், எப்போதும் அவர்கள் பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். தங்கள் பிள்ளைகளின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொண்டு நிறைவேற்றுவார்கள். பெற்றோர்கள் அழகாக இருந்தால் என்ன லாபம்? அழகான பெற்றோரை தங்களோடு அழைத்துச்செல்வதே கவுரவம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். அதனால் தங்கள் பெற்றோரை எப்படி எல்லாம் அழகுப்படுத்தலாம் என்று பிள்ளைகள் மெனக்கெடவும் செய்கிறார்கள். பெற்றோருக்கு அவ்வப்போது அழகு ஆலோசனைகளும் சொல்லி வருகிறார்கள்.

பொதுவாக எல்லா பெற்றோருக்கும் போதிய கல்வி அறிவு இருக்கும் என்று சொல்ல முடியாது. கல்வி அறிவு இல்லாவிட்டாலும்கூட, தங்களது பொது அறிவை மேம்படுத்தி குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து அவர்களை திருப்திப்படுத்தும் பெற்றோராக இருப்பது இன்று அவசியமாகிறது. போதிய கல்வி அறிவு இல்லாத பெற்றோருக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடும். அந்த தாழ்வு மனப்பான்மையால் யார் முன்னாலும் தன் பெற்றோர் தலைதாழ்ந்து நின்றுவிடக்கூடாது என்றும் குழந்தைகள் எதிர்பார்க்கின்றன. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பிள்ளைகளின் மனது காயப்படும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ளவேண்டும். அதனால் பிள்ளைகளுக்காக அவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது.

மேலும், பெற்றோரின் உழைப்பில்தான் குழந்தைகள் படித்து முன்னேறுகின்றன. தனது தந்தை என்ன வேலை பார்க்கிறார்? என்பதிலும், அவர் வாங்கும் சம்பளம் அல்லது சம்பாதிக்கும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கவேண்டும் என்பதிலும் குழந்தைகள் கவனமாக இருக்கின்றன. அப்பா பார்க்கும் வேலை சொல்வதற்கு மகிழ்ச்சியாக இல்லை என்றாலும், வாங்கும் சம்பளம் மிகக் குறைவாக இருந்தாலும் குழந்தைகள் வருத்தப்படுகின்றன என்பதை பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டிய காலம் இது.

பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். “வேலைக்கு செல்வதால் தங்களோடு பெற்றோர் அதிக நேரம் இருப்பதில்லை” என்ற கவலை குழந்தைகளுக்கு இருந்தாலும், பெற்றோர் அருகில் இல்லாத நேரத்தில் தனது நேரத்தை செலவிட சரியான ஏற்பாடுகளை செய்து கொடுத்தால், அந்த பெற்றோர்களை குழந்தைகளுக்கு பிடிக்கிறது. அந்த ஏற்பாடுகள் குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சிறுமிகள் தங்களுக்கு பலவிஷயங்கள் தெரியும் என்று, தங்கள் தோழிகளிடம் கூற ஆசைப்படுகிறார்கள். அதற்காக புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். இந்த வாய்ப்பை புரிந்துகொண்டு எந்த தாய் தன் குழந்தைக்கு சமையல், அலங்காரம், தையல் கலை போன்றவைகளை சொல்லிக்கொடுக்கிறாரோ, அவர் தன் குழந்தைகளிடம் அந்தஸ்துமிக்கவராக மாறிவிடுகிறார்.

இதை தாய் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றால், முதலில் அவர் அவைகளை கற்றுக் கொள்ள வேண்டும். நிறைய கலைகளை கற்றுத் தெரிந்து வைத்திருக்கும் அம்மாக்களுக்கு அவர்களது பெண் குழந்தைகள் அதிக மதிப்பு கொடுக்கிறார்கள் என்பது கவனிக்கத் தகுந்த விஷயமாகும்.

எப்போதும் திட்டுவது, அடிப்பது, கடிந்து கொள்வது என்று செயல்படும் பெற்றோரை குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. தாங்கள் எப்போதும் கிறுக்கிக்கொண்டே இருந்தாலும், ‘நீ கிறுக்குவதற்குள் ஒரு ஓவியன் ஒளிந்திருக்கிறான்’ என்று கூறி ஊக்கம் அளித்து, அதற்கான வகுப்புகளுக்கு அனுப்பி, தங்களை ஓவியர் ஆக்கிவிட்டால் அந்த பெற்றோரை தலைக்கு மேல் தூக்கிவைத்துக்கொண்டு குழந்தைகள் கொண்டாடுகின்றன.

சிறுமிகள் தற்போது தங்கள் அம்மாக்கள் அழகு விஷயத்தில் ‘அப் டு டேட்’ ஆக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதனால் தோழி போல் பழகும் அம்மாக்களை பியூட்டி பார்லர்களுக்கு அழைத்துச் சென்று காலத்திற்கு தக்கபடி அழகாக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள்.

அதுபோல் அப்பாக்களும் இளமையுடன் வலம் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். தொப்பையுடன் வலம் வரும் அப்பாக்களை ‘ஜிம்’முக்கு கட்டாயப்படுத்தி அனுப்பிவைக்கும் வேலையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எனவே, பெற்றோர்கள் அனவரும், காலம் மாறிக்கொண்டிருப்பதை கவனத்தில் கொள்ளுதல் மிகவும் அவசியமானதொன்றாகும்.

Expecting children from Parents

Related posts

20-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம்..!

Tharshi

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அரசாங்கத்தின் உயர் பதவி..!

Tharshi

2 comments

Leave a Comment