நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் கொழும்பிலுள்ள இல்லத்தில் வைத்து தீ காயங்களுடன் உயிரிழந்த மலையகச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் கொழும்பிலுள்ள இல்லத்தில் வைத்து தீ காயங்களுடன் உயிரிழந்த மலையகச் சிறுமி தொடர்பில், கொழும்பு – பொறளை பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
சிறுமியின் உடல் மரண பரிசோதனையின்போதே அவர் நீண்டகாலமாக பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ரிஷாட் பதியூதீனின் இல்லத்திற்கு வீட்டுப் பணிப்பெண்ணான வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 03 ஆம் திகதி திடீரென ஏற்பட்ட தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.