குறும்செய்திகள்

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா : புதிதாக 65 பேருக்கு தொற்று உறுதி..!

In China Confirmation of infection in 65 newcomers

கடந்த சில தினங்களாக சீனாவில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலகில் முதன் முதலாக, கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டது.

இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 31 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

மேலும், கடந்த ஜனவரி 30 ஆம் திகதி 92 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், அதன் பிறகு தற்போது பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

அத்துடன், அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 19 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்தவகையில், இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 92,342 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

In China Confirmation of infection in 65 newcomers

Related posts

28-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

உலகமெங்கும் 85 நாடுகளுக்கு பரவியுள்ள டெல்டா வைரஸ் : எச்சரிக்கை தகவல்..!

Tharshi

காந்தி நகரில் உள்ள மயானத்தில் தாயின் சிதைக்கு தீ மூட்டினார் பிரதமர் மோடி..!

Tharshi

Leave a Comment