குறும்செய்திகள்

24-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

24th July Today Raasi Palankal

இன்று ஜூலை 24.2021

பிலவ வருடம், ஆடி 8, சனிக்கிழமை, 24.7.2021
தேய்பிறை, பவுர்ணமி திதி காலை 8:49 வரை,
அதன்பின் பிரதமை திதி, உத்திராடம் நட்சத்திரம் மதியம் 2:03 வரை,
அதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
பொது : பெருமாள், அனுமன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். பணி பற்றிய டென்ஷன் நீங்கும்.
பரணி: நிதி நிலை மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும்.
கார்த்திகை 1: எதிர்பார்ப்பை அடைவதற்கான சந்தர்ப்பம் உண்டாகும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: முயற்சியில் தீவிரம் காட்டி வெற்றியை எளிதாக நெருங்குவீர்கள்.
ரோகிணி: புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவர்.
மிருகசீரிடம் 1,2: குடும்ப சண்டை உங்களால் பெரிதாக வேண்டாம். பொறுமை தேவை.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: மனசாட்சிக்கு மதிப்பு கொடுங்கள். தீயவர்களின் நட்பு வேண்டாம்.
திருவாதிரை: முன்னேறுவதற்குக் குறுக்கு வழியை நாடுவது நல்லதல்ல.
புனர்பூசம் 1,2,3: வாழ்க்கைத்தரத்தை உயர்த்த கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: திட்டமிட்ட விஷயங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.
பூசம்: குடும்பத்தினருடன் இனிய முறையில் நேரம் செலவிட்டு மகிழ்வீர்கள்.
ஆயில்யம்: மனதில் தெளிவு பிறக்கும் நாள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

சிம்மம் :

மகம்: வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்துவீர்கள். நல்லவர்கள் வழிகாட்டுவர்.
பூரம்: உங்களால் நன்மை அடைந்த உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.
உத்திரம்1: வழக்கத்தை விட சற்று பணிச்சுமை கூடும். பாராட்டு கிடைக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: வீடு, பணி இடமாற்றத்துக்கு வாய்ப்புண்டு. வீண்பயம் மறையும்.
அஸ்தம்: புதிய வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். உடல்நிலை சீராகும்.
சித்திரை 1,2: பிரச்னை ஒன்றைச் சமாளிக்க வேண்டியிருக்கும். பேச்சில் கவனம் தேவை.

துலாம்:

சித்திரை 3,4: பயணத்தால் ஆதாயம் காண்பீர்கள். சோர்வு ஏற்பட்டாலும் உற்சாகம் குறையாது.
சுவாதி: வியாபாரத்தில் வருமானம் உயரும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும்.
விசாகம் 1,2,3: பணியாளர்களுக்கு செல்வாக்கு கூடும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

விருச்சிகம்:

விசாகம் 4: முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மனக்கசப்பு நீங்கும்.
அனுஷம்: மற்றவர் விஷயங்களில் ஆர்வம் காட்ட வேண்டாம். பொறுமை தேவை.
கேட்டை: குடும்பத்தில் அமைதி நிலவும். திட்டமிட்டபடி பணிகளைச் செய்வீர்கள்.

தனுசு:

மூலம்: கற்பனை பயங்களை உதறுங்கள். உழைப்பு அதிகம் தேவைப்படும்.
பூராடம்: மன அமைதி தேவையென்றால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.
உத்திராடம் 1: சிலருக்கு அரசாங்க விஷயங்களில் அனுகூலம் கிடைக்கும்.

மகரம் :

உத்திராடம்2,3,4: புதிய பதவி எதிர்பார்த்திருப்பவர்களுக்கு தடங்கல் ஏற்படலாம்.
திருவோணம்: புதிய வாகனம் வாங்குவதை கொஞ்சம் தள்ளிப் போடுவது நல்லது.
அவிட்டம்1,2: ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். தன்னம்பிக்கை கூடும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: உணவுக் கட்டுப்பாடு அவசியம். யோகமான நாள்.
சதயம்: கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு வராமல் விட்டுக் கொடுங்கள்.
பூரட்டாதி1,2,3: லாபம் ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

மீனம்:

பூரட்டாதி 4: பொருளாதாரத்தில் தடைகள் குறுக்கிடலாம். நண்பர்கள் உதவி செய்வர்.
உத்திரட்டாதி: கடன் வாங்கும் சூழ்நிலை வரலாம். தொழிலை விரிவாக்க வேண்டாம்.
ரேவதி: சிலருக்கு பதவி உயர்வோ அல்லது கூடுதல் வருமானமோ கிடைக்க வாய்ப்புண்டு.

24th July Today Raasi Palankal

Related posts

மனைவியின் சொத்தை கணவன் சொந்தம் கொண்டாட முடியுமா..!

Tharshi

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை : முதலிடத்தில் கேன் வில்லியம்சன்..!

Tharshi

சிம்புவின் “மஹா” படத்துக்கு கோர்ட் தடையா..?

Tharshi

Leave a Comment