குறும்செய்திகள்

வெளியீட்டுக்கு முன்பே விற்பனை : ஆப்பிளை கலங்கடிக்கும் சீனா..!

Apple Watch Series 7 Knockoff is already in china

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 இப்படித் தான் காட்சியளிக்கும் என நினைத்து அதன் நகல் தற்போது சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் சீரிஸ் 7 மாடல் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வாட்ச் சீரிஸ் 7 போன்ற தோற்றம் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ட்விட்டரில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் ஸ்மார்ட்வாட்ச் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற நிறங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வாட்ச் சீரிஸ் 7 மாடலின் நகல் என கூறப்படுகிறது. சந்தையில் வெளியாகும் முன்பே ஆப்பிள் சாதனத்தின் நகல் விற்பனைக்கு வந்துள்ளது.

சீன சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள ஸ்மார்ட்வாட்ச் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆன கேட் ரென்டர்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 தோற்றம் கொண்ட வாட்ச் சீனாவில் 350 முதல் 400 யுவான் விலையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

Apple Watch Series 7 Knockoff is already in china

Related posts

26-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஒரு கோடி ரூபாய் ஆஃபர் : பிரபல நடிகையை அணுகிய பிக்பாஸ் 4 டீம்..!

Tharshi

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : தெண்டுல்கரின் கணிப்பு..!

Tharshi

Leave a Comment